தேனியில் தொடர் மழை.......பல்வேறு இடங்களில் சூழ்ந்த மழை வெள்ளம்..!
மேற்கு தொடர்ச்சி மலையடி வார மாவட்டமான தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழை . தேனியில் பல்வேறு இடங்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தேனி நகரில் நேற்று மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் : பழனியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து செப்பேடு கண்டுபிடிப்பு.
தேனி நகரின் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் குளமாக தேங்கியது. பங்களாமேடு பகுதியில் மதுரை சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு குளமாக தண்ணீர் தேங்கியது.
இதனால் வாகனங்கள் மழை நீர் சூழ ஊர்ந்து சென்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் மழை வெள்ளத்தால் கடும் அவதியுடன் கடந்து சென்றனர்.
தேனியில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேறும் பிரதான வழித்தடமாக ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியது. அதுபோல், இந்த வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சுப்பன்தெரு திட்டச்சாலையிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் ஆறாக ஓடியது.
அப்போது சாலையில் இருந்த வேகத்தடைகள் மற்றும் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் தடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்றனர். மேலும் ராஜவாய்க்கால் கரையோர பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பங்களாமேட்டில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியதால் பாரஸ்ட்ரோடு தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. தேனி பழைய பஸ் நிலையம், பழைய டி.வி.எஸ். சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி குளமாக காட்சி அளித்தது.
இண்டிகோ விமானத்தில் பூச்சிகள்.. கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் பகிர்ந்த பரபரப்பு ட்வீட்..
இதேபோல் கம்பம், பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அப்போது வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்