மேலும் அறிய

அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தேனி மாவட்டத்தில் போடி மற்றும் சின்னமனூரில் குவாரி மற்றும் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சேர்ந்தவர் மகேஷ் இவரது மனைவி பாரதி மகன் விஷால் (16) 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திக் (14) இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் போடிக்கு சென்றுள்ளனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வடக்கு மலைப்பகுதிகளில் கிராமத்தை அடுத்த கோம்பை ஆற்றில் குளித்தனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் விஷால் நீர் சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நல்லுக்கொண்டு பாறை என்ற அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செயல்படாமல் உள்ளது.

இந்த கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கல் குவாரியில் வேப்பம்பட்டி மற்றும் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வப்போது குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், கௌதம், மாதவன் ஆகிய மூன்று மாணவர்கள் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

இதனால் பதினான்கு வயதாகும் லோகேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கௌதம் என்ற சிறுவன் காப்பாற்ற முற்பட்டு உள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற சென்ற சிறுவன் உட்பட இருவரும் 20 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.விபத்தில் உயிர் இழந்த சிறுவர்களின் உடல்களும், தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரியில் இரு சிறுவர்கள் முழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget