ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை இட வேண்டும், அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஆண்டவனுக்கு பிச்சை இடக்கூடாது - பொன்மாணிக்க வேல்
சென்னை மியூசியத்தில் உள்ள 2500 கோவில் சிலைகளை வெறும் காட்சி பொருளாக வைக்காமல் அந்தந்த கோயில்களில் மீண்டும் நிறுவ வேண்டும்.முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேச்சு.
திண்டுக்கல்லில் உலக சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மற்றும் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
FIFA WORLDCUP 2022: கோல்மழை பொழியவுள்ள கோலாகலமான உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்..
இதில் முன்னாள் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் புனரமைப்பு பணிக்காகவும், வளர்ச்சி பணிக்காகவும் யாரும் உண்டியலில் பணம் போடக்கூடாது. அதற்கு பதிலாக அர்ச்சகர்கள் வாழ்வாதாரத்தை முன்னிட்டு தட்டில் பணம் போட வேண்டும். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கும் பிச்சையிட வேண்டும். அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ, ஆண்டவனுக்கு பிச்சையிடக்கூடாது. இந்து அறநிலையத்துறை என்பதே தமிழகத்திற்கு தேவையில்லை.
Khushbu: 'தமிழு'க்கு பதில் 'தமில்' என பதிவிட்ட குஷ்பு..! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..
கோவில் கல்வெட்டுகளில் இருந்து அதிகாரிகளின் பெயர்களை வெட்டி எடுக்க வேண்டும். சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள புராண காலத்து தெய்வச் சிலைகளை அந்தந்த கோவில்களில் உடனடியாக வழங்கி மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அரசை சந்தித்து மனு கொடுப்பது என்பது எங்களுக்கு கிடையாது. அரசு எங்களை சந்தித்து இதனை செய்து தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சார்ய சுவாமிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திண்டுக்கல் மலைக்கோட்டையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்களிடம் ஒப்படைத்து வழிபாடு நடத்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்