மேலும் அறிய

தேனி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார்... கேரள அமைச்சர் பதிவால் சர்ச்சை

நீதிமன்றம் அனுமதி கிடைத்தவுடன் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதும் நமக்கு சாதகமாகவே உள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை, தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது.

தேனி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார்... கேரள அமைச்சர் பதிவால் சர்ச்சை

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 8 ஆண்டுகள் ஆகியும் பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணை பலமாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

தேனி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார்... கேரள அமைச்சர் பதிவால் சர்ச்சை

இது ஒருபுறம் இருக்க கேரளாவில் அணைக்கு எதிரான வதந்திகளை சிலர் தொடர்ந்து பரப்பி மக்களை அச்சப்படுத்தி வருகின்றனர். அணைக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுபோன்ற வதந்தி, அவதூறுகள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் வதந்தி பரப்புபவர்களால் இருமாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள நீர்வளத்துறை செய்த திட்டங்கள் தொடர்பான அவரின் முகநூல் பதிவில், "முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு". அணையில் 136 அடி நீர்மட்டம் என்பது கேரளாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை.

தேனி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார்... கேரள அமைச்சர் பதிவால் சர்ச்சை
ஆனால், 142 அடி என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. தமிழகத்துக்கு தண்ணீர் என்பதே கேரளாவின் இலக்கு. தற்போது உள்ள அணைக்கு கீழ் பகுதியில் 1,300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி கிடைத்தவுடன் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதும் நமக்கு சாதகமாகவே உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் சாத்தியமான அனைத்தையும் மாநில அரசு செய்து வருகிறது" என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget