தாயை கொன்ற வழக்கு; மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு
முகத்தில் கோடாரியை கொண்டு வெட்டி தாக்கியதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஜோதிலட்சுமி தம்பதியரின் மகன் மருதுபாண்டி (23). கஞ்சா மற்றும் குடி போதைக்கு அடிமையான மருதுபாண்டி, அவ்வப்பொழுது பணம் இல்லாத போது, தாய் தந்தையரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதே வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13.12.2022 அன்று தாய் ஜோதிலட்சுமியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்பொழுது தாய் ஜோதிலட்சுமி எந்த வேலைக்கும் செல்லாமல் இப்படி பிழைக்கிறதுக்கு பிச்சை எடுத்துப் பிழை என சொல்லி மருது பாண்டியை திட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு தலையின் பின் பக்கம் பலமாக தாக்கியதில் அவரது ஜோதிலட்சுமி கீழே விழுந்துள்ளார். அப்பொழுதும் அவர் முகத்தில் கோடாரியை கொண்டு வெட்டி தாக்கியதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இந்தக் கொலை சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Bigg Boss 7 Tamil: ட்விஸ்டா இருக்கே! இந்த வாரம் பிக்பாஸில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கின் சாட்சிகளின் அடிப்படையிலும், கொலை குற்றத்தை செய்த மருதுபாண்டி விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மருதுபாண்டி குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி மருதுபாண்டியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.