Theni: தாயுடன் தகாத உறவில் இருந்த நபர் கொலை; மகன், மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பாண்டி என்பவரை வரவேண்டாம் என கூறிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உறவை தொடருமாறு வற்புறுத்தியுள்ளார்.
![Theni: தாயுடன் தகாத உறவில் இருந்த நபர் கொலை; மகன், மருமகனுக்கு ஆயுள் தண்டனை Theni court sentenced the son and son-in-law to life imprisonment for murdering the man who had an inappropriate relationship with the mother. Theni: தாயுடன் தகாத உறவில் இருந்த நபர் கொலை; மகன், மருமகனுக்கு ஆயுள் தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/8c685542050957e3d6983c0b9d4ae7071689332028461739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டம் உத்தமபாளையம் துரைசாமிபுரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (45). இவர் அப்பகுதியில் தனது மகன் மணி (23) மற்றும் மகள் பிரேமா (25) ஆகியோருடன் வசித்து வந்தார். எனவே அவரது தனது மகள் பிரேமாவை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த விஜய பாண்டியன் (28) என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 வருடத்திற்க்கு முன்பாக பாக்கியம் என்பவருக்கும் உத்தமபாளையம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இதனால் பாக்கியத்தை அவரது உறவினர்கள் அறிவுறைகள் கூறி கண்டித்தனர். அதனைத் தொடர்ந்து பாண்டி என்பவரை வரவேண்டாம் என கூறிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உறவை தொடருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு இதை அறிந்த பாக்கியத்தின் மகன் மணி மற்றும் மகள் பிரேமாவின் கணவர் விஜய பாண்டியன் ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டியை அவரது தோட்டத்தில் உள்ள கிணத்து மேட்டில் தனியாக இருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்பு உடலை கிணற்றில் போட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாண்டியின் மகள் சின்னமனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணையானது நேற்று முடிவுற்று விஜய பாண்டி மற்றும் மணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா 5000 ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை பெற்ற மணி மற்றும் விஜய பாண்டி என்ற குற்றவாளிகளை காவல்துறையினர் சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)