மேலும் அறிய

WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

மதுரையில் நடைபெற்ற WOW MADURAI நிகழ்ச்சி முறையான ஏற்பாடு இல்லாததால்  பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணாநகர் பகுதியில் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் கொண்டாட திட்டமிடப்பட்டது. இதை, மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் உரிய அனுமதியுடன் HAPPY STEET நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மதுரை மாநகராட்சி மட்டுமன்றி மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்,  இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் வந்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் மதுரை அண்ணாநகர் முதல் மேலமடை வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டதால் கடுமையான நெருக்கடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை  நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது கடந்த  10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு நடிகர் சூரி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாக கூறி இன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற்றது .

WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!
 
காலை 7 மணிக்கு தொடங்கும் என்பதால் பொதுமக்கள் 5 மணி முதலாகவே அண்ணா நகர் பகுதிக்கு வருகை தர தொடங்கினர். இதனால் காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும் ஆட்டம் பாட்டம் மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இருக்கும் என எதிர்பார்த்து வந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமடைந்தனர்.  நடிகர் சூரி வருகை தந்த நிலையில் அமைச்சர், மேயர் உள்ளிட்ட வருகை தருவதற்கு தாமதமான நிலையில் நிகழ்ச்சியை தொடங்குவதற்கு 8.30 மணி ஆகியது. தொடர்ந்து அமைச்சர்களை வரவேற்பதாக கூறி பேசிக்கொண்டே இருந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அடுத்தடுத்து பொதுமக்கள் வருகை தர தொடங்கியதால் ஒரே இடத்தில் 30,000 மேற்பட்டோர் கூடி கடும் நெருக்கடி ஏற்பட்டது இதனால்  கூட்டத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. மேலும்  கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் தாங்கள் வெளியேற வேண்டும் என காவல்துறையினரிடம் கெஞ்சியும் காவல்துறையினர் அமைச்சர்களை காரணம் காட்டி வெளியேற்றதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.

WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!
 
மேலும், மாநகராட்சி சார்பில் 30 ஆயிரம் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில் அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் வந்த பொதுமக்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் வந்து சென்ற அடுத்த நிமிடமே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த இளைஞர்களும் பெண்களும் ஒரு பாடல்களுடன் போடாமல் தங்களை நிகழ்ச்சி ரத்து என கூறிய அனுப்பி விட்டதாக தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு முன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். 
கூட்ட நெரிசலில் மின் கம்பங்கள் ட்ரான்ஸ்பார்ம்களில் ஆபத்தை அறியாமல் இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தூக்கி போட்டு விளையாடும் விபரீதமும்,  மேலும் அருகில் உள்ள திரையரங்குகளில் உயரமான சுவர்களில் ஏறி குதித்தும் சென்ற நிலை ஏற்பட்டது.

WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!
 
இதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அந்த பகுதிக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது இது போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் முறையாக அந்தந்த பகுதிகளில் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடாமல் ஒட்டுமொத்த மதுரைக்கும் இது ஒரே ஒரு நிகழ்ச்சி என்பது போல விளம்பரம் செய்யப்பட்டதால் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களும் பெண்களும் கூடியதால் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர். இதில் சிலர் தடுப்புகளை உடைந்து உள்ளே விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது கூட்ட நெருச்சலில் சிலருக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்திபோதும் கட்டுக்கடாங்காத கூட்டத்தால் நெருக்கடி ஏற்பட்டது.

WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!
 
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏ.ஆர். ரஹ்மான் தனியார் நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் குளறுபடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் மதுரையில் நடத்தப்பட்ட மாநகராட்சி நிகழ்ச்சியும் இது போன்ற குளறுபடி ஏற்பட்டுள்ளது நிர்வாக திறனை கேள்வி எழுப்பியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அதிமுக-திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் எங்களை வெல்ல முடியாது: - மதுரையில் நிர்மல்குமார் பேட்டி !
அதிமுக-திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் எங்களை வெல்ல முடியாது: - மதுரையில் நிர்மல்குமார் பேட்டி !
கொடைக்கானல் சாலையில் முகாமிடும் குரங்குகள்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
கொடைக்கானல் சாலையில் முகாமிடும் குரங்குகள்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு: நீர்மட்டம் சரிவு, விவசாயிகள் கவலை
முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு: நீர்மட்டம் சரிவு, விவசாயிகள் கவலை
மதுரை நாளை சனிக்கிழமை (05.09.2026) ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... லிஸ்டை முழுசா செக் பண்ணுங்க !
மதுரை நாளை சனிக்கிழமை (05.09.2026) ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... லிஸ்டை முழுசா செக் பண்ணுங்க !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget