மேலும் அறிய
பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...!
உசிலம்பட்டியில் நடந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்களுக்கான போட்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
![பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...! The Usilambatti music competition was held as a traditional gramophone record பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/759273013d780552aed3f4c01761c1e61691947623730184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிராமபோன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தும்மக்குண்டு என்ற கிராமத்தில் மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம் சௌந்தர் ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசைப் போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு - பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் இசைப் போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஒலி, ஒளி அமைப்பினர் கலந்துகொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்..#abpnadu | @SRajaJourno | #abp pic.twitter.com/nxqD4BJaYu
— arunchinna (@arunreporter92) August 13, 2023
ஒலிபெருக்கி அமைப்பாளர்கள்:
இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100 -க்கும் அதிகமான ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS Press Meet: சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும் - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
![பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/8889d89af98fac0fb1f09f2a48e266241691946516614184_original.jpeg)
இரு தரப்பினரில் யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர். மூன்று சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வரும் 22 -ம் தேதி வணிக வரி மற்றும் பத்திரிப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.,
![பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/2dbfa00ca80a001517ea3c54aee845a61691946583837184_original.jpeg)
டி.எம்.எஸ் நூற்றாண்டு விழா:
நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க கோரும் விதமாக இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.எஸ்-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமர்சையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.,
இது குறித்து ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில்...,” உசிலம்பட்டி பகுதியில் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு அதிக முக்கியதுவம் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் கருமாதி என்றாலும் எங்களுக்கு வேலை இருக்கும். ரேடியா செட் பாடல்களை விரும்பி கேட்பார்கள். இப்படி இருக்கும் எங்களுக்கு போட்டிகள் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற போட்டிகள் எல்லா இடங்களிலும் நடத்த வேண்டும்” என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - T.M Soundararajan : மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு இனி டி.எம். சௌந்தரராஜன் பெயர்... அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion