மேலும் அறிய
Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி
கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பினது கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது.
![Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி Keezhadi Excavation 9th phase snake made of clay, an ancient weight stone was discovered TNN Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/20f45d1abed084ee6335d5d3abef3e231691560786884184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள்
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்கால எடைக்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக்கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
![Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/0006af143b1ff586ecc5469f30f4e18f1691559492813184_original.jpeg)
இந்த எடைக்கல் பளபளப்பான மேற்பரப்புடன் கூடியது, சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகளும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. 175 செ.மீ. ஆழத்தில் பழங்கால எடைக்கல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவ்வெடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது. இக்கல் 2 செ.மீ.விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எனட கொண்டுள்ளது.
In the ninth phase of excavations at Keeladi, while sorting potteries found at the depth of 190 cm in the quadrant XM19/3 a fragment of snake figurine made of terracotta was noticed. The eyes and mouth of the snake are intricately carved.
— arunchinna (@arunreporter92) August 9, 2023
1/2 pic.twitter.com/2QGDSldrjP
அதே போல் அகழாய்வுக் குழியில் 190 செ.மீ. ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது. உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பினது கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது.
![Keezhadi Excavation: கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இதுவா..? - என்ன ஒரு நேர்த்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/c55424ddf44d9ea236bb3fe797d0acf11691560010565184_original.jpeg)
மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ. நீளம் 5.4 செ.மீ. அகலம் 1.5 செ.மீ. தடிமன் கொண்டுள்ளது. இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
- அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி; 5-ம் வகுப்பே படித்த அப்பள வியாபாரியின் நெகிழ்ச்சி செயல்!
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion