மேலும் அறிய
முகூர்த்த நாள் எதிரொலி.! ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரம்..!
”இந்த வருடத்தில் இன்று தான் கிலோ ரூ.4 ஆயிரம் என மல்லிகை பூ விலை உச்சம் தொட்டுள்ளது.’’ என்றனர்.

மல்லிகை பூ
கொரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கியதால் வீட்டு விழாக்கள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பூக்கள் வாங்க ஆளில்லை. கோயில்களும் மூடப்பட்டதால் பூக்கள் தேவை முற்றிலும் இல்லாமல் இருந்தது. அதனால், விவசாயிகள் பூக்களைப் பறிக்காமல் செடி களிலேயே விட்டனர். வருமானம் இன்றி செடிகளையும் பராமரிக்க முடியவில்லை. அதனால், சந்தைக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின் பூவின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.
மதுரையில் மல்லி விலை இன்று உச்சம் தொட்டது ! (12.12.2021)
— Arunchinna (@iamarunchinna) December 12, 2021
கிலோ மல்லிகைப் பூ - ரூ. 4,000
அரளிப் பூ கிலோ - ரூ.400
முல்லைப் பூ கிலோ - ரூ 1500
பிச்சிப்பூ கிலோ - ரூ. 1500
சம்மங்கிப் பூ கிலோ - ரூ.250
செண்டு மல்லி கிலோ - ரூ. 200
பட்டன் ரோஸ் கிலோ - ரூ. 300
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் போன்றவை முக்கியமானவை. இந்த மார்க்கெட்களுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது முகூர்த்த நாளிலான இன்று விலை உச்சம் தொட்டுள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க் கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4000 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
#abpnadu
தொடர் மழையால் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தைக்கு மதுரை மல்லிகை வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூ விலை உயரத் தொடங்கி இருக்கிறது.— Arunchinna (@iamarunchinna) December 12, 2021
மதுரையில் மல்லி விலை இன்று உச்சம் தொட்டது ! (12.12.2021)
கிலோ மல்லிகைப் பூ - ரூ. 4,000
அரளிப் பூ கிலோ - ரூ.400
முல்லைப் பூ கிலோ - ரூ 1500
பிச்சிப்பூ கிலோ - ரூ. 1500
சம்மங்கிப் பூ கிலோ - ரூ.250
செண்டு மல்லி கிலோ - ரூ. 200
பட்டன் ரோஸ் கிலோ - ரூ. 300
தாமரை ஒரு பூ - ரூ.25

இது குறித்து மதுரை பூ மார்கெட் சங்க நிர்வாகி ராமசந்திரன் கூறுகையில்..., ‘‘ தொடர் மழை காரணமா பூக்கள் வரத்துக் குறைவாக உள்ளதால், அனைத்து வகைப் பூக்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. அதில் மல்லிகைப்பூ வரத்து மொத்தமாகச் சரிந்ததால் அதன் விலை விலை உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் இன்று தான் மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ளது.’’ என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement