மேலும் அறிய

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மதிகெட்டான் சோலை மர்மக்காடு-இதுவரை 12 பேர் உயிரிழந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கனல் மலைப்பகுதியில் அமைந்துள்ளது மதிகெட்டான் சோலை எனும் வனப்பகுதி இந்த பகுதியை கொடைக்கானலில் ஒருமர்மகாடு என அழைக்கப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில்  மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது கொடைக்கானல். இந்த பகுதில் அடந்த வனப்பகுதிகள் அழகிய மலைமேடுகள் என பார்ப்பவகளை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரபலமான சுற்றுலா தலத்தில்   மதிக்கெட்டான் சோலை எனும் அடர்ந்த வனப்பகுதி கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வனத்திற்கு உள்ளே செல்லாமல் சாலையிலிருந்து இந்தக் காட்டை பார்த்து இரசிக்க முடியும்! வனத் துறையினரின் அனுமதி பெறாமல் இங்கு செல்ல முடியாது. தற்போது இங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மதிகெட்டான் சோலை மர்மக்காடு-இதுவரை 12 பேர் உயிரிழந்த சோகம்

இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் இந்தக் காட்டின் உள்ளே செல்பவர்கள் தங்கள் மதி மயங்கி காட்டை விட்டு வெளியே வராமல் அங்கேயே உயிரை விட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. மீறி உயிருடன் திரும்புபவர்கள் தங்கள் அறிவிழந்து ஒருவித பைத்தியக்கார மனநிலையில் தான் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தக் காட்டினுள் பலவித மூலிகைகள் இருப்பதாகவும் அவை இந்தக் காட்டிற்குள் நுழையும் மனிதர்களின் மதியை மயக்கி அவர்களின் மரணத்திற்கு காரணமாகிறது என்று சொல்லப்படுகிறது. சித்தர் போகர் உருவாக்கிய சிலை ஒன்று இந்தக் காட்டினுள் இருப்பதாகவும் அந்த சிலையைப் பாதுகாக்க சித்தர்களின் சித்து விளையாட்டுதான் காட்டினுள் அத்துமீறி நுழைபவர்களை இவ்வாறு பைத்தியக்கார மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் சமயத்தில் மரணத்தை சம்பவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மதிகெட்டான் சோலை மர்மக்காடு-இதுவரை 12 பேர் உயிரிழந்த சோகம்

வீட்டில் பூஜை அல்லது விஷேசங்கள் நடக்கும் பொழுது குழந்தைகள் இனிப்புகளை முதல் ஆளாக எடுத்து தின்றுவிடாமல் இருப்பதற்காக "சாமி கண்ணைக் குத்திவிடும்!" என்று நாம் சொல்லி பயமுறுத்துவது போல் 'மதிகெட்டான் சோலை', என பெயர் வைத்து அதன் மூலம் மக்கள் இதற்குள் செல்லாமல் தடுத்து இயற்கையை பாதுகாக்க சிலர் மேற்கொண்ட ஒரு உத்திதான் இது; அது காலம்காலமாக தொடர்கிறது எனவும் கருத்து நிலவுகிறது. மிகுந்த அடர் வனமாக இருப்பதால் சூரிய ஒளி இக்காட்டில் புகாது. ஆகவே பகலிலும் கூட இருளாகவே இருக்கும். சில அங்குலம் உயரதிற்கு தரையிலிருந்து மேலே கொட்டி கிடைக்கும் இலை மற்றும் தழைகளின் மேல் நடக்கும் மனிதர்கள் சிறிது தண்ணீர் தேங்கி அதனால் ஏற்படும் சதம்பல்களில் சிக்கிக் கொள்கின்றனர். இது அமானுஷ்யமான கலக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி திகிலடைய வைக்கிறது.

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மதிகெட்டான் சோலை மர்மக்காடு-இதுவரை 12 பேர் உயிரிழந்த சோகம்

காட்டு விலங்குகளின் அச்சுறுதலும் இருக்கிறது.  வண்டுகள், பூச்சியினங்கள் மற்றும் பறவைகளின் புதுவித சத்தங்கள் நிச்சயம் எவரையும் திகைப்படைய வைக்கும். இவைகள் எல்லாம் சேர்த்து கொடுக்கும் பயம் காரணமாக இந்த காட்டிற்குள் நுழைபவர்கள் தங்கள் சமநிலையை இழந்து வந்த வழி மறந்து இருளில் பாதை மாறி பெரும் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் காட்டிலேயே சுற்றி சுற்றி இறுதியில் தங்கள் உயிரை விட்டுவிடுவர் அல்லது மீட்கப்பட்டாலும் தாங்கள் சந்தித்த இந்த பயங்கர அனுபவத்தின் காரணமாக ஒருவித பிரம்மைப் பிடித்த மனநிலைக்கு சென்று விடுவர் என்றும் சொல்லப்படுகிறது! இதில் நான்காவது காரணம்தான் உண்மையாக இருக்கும் என்று நமது அறிவு நமக்கு உணர்த்துகிறது! எது எப்படி இருந்தாலும் இயற்கையின் இந்த பிரம்மாண்டம் நிச்சயம் அதிசயம்தான்! ஆபத்தும்தான்!

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
Embed widget