Madurai: 2 வருடங்களுக்கு பிறகு.. களைகட்டும் கள்ளழகர் திருவிழா! காத்திருக்கும் பக்தர்கள்! தயாராகும் மதுரை!
சித்திரைத் திருவிழாக்கான பணிகள் குறித்து கள்ளழகர் வைகையாற்றி எழுந்தருளும் இடத்தில் மதுரை மேயர், துணை மேயர் ஆய்வு செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்திற்குள்ளேயே நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனுமதியுடன் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
#Abpnadu | மதுரை சித்திரைத் திருவிழாக்கான பணிகள் குறித்து கள்ளழகர் வைகையாற்றி எழுந்தருளும் இடத்தில் மதுரை மேயர் மற்றும் துணை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.#Abpnadu | #madurai #மேயர் | #கள்ளழகர் #திருவிழா #சித்திரை @ilayakeeravani @ranjim | @MumbaiPolice pic.twitter.com/POIlvXqLaY
— Arunchinna (@iamarunchinna) March 10, 2022
அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் தற்போது நிரந்தர பாலத்தில் நீரை நிரப்பால் பணிகள் குறித்தும், விழாவிற்கான மேடைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். pic.twitter.com/orgwt9LilC
— Arunchinna (@iamarunchinna) March 10, 2022