மேலும் அறிய
Advertisement
காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 மாதம் கருத்தரித்த கொடுமை!
கிறிஸ்தவ சேனா காப்பாகத்தில் அனுமதிக்கப்பட்ட 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கருத்தரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரையில் ’இதயம்’ என்ற தனியார் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட ஆதரவற்றோர் இல்லத்தில், ஆண் குழந்தை ஒன்று இறந்ததாக கூறி நாடகமாடியது தெரிவந்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அங்கு பணி செய்த பெண்கள் இதயம் டிரெஸ்ட் நிறுவனர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அந்த பிரச்னை சமூக நலத்துறை பார்வைக்கு சென்று பல்வேறு ஆதரவற்ற இல்லங்களில் சோதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சட்ட விரோதமாக இயங்கிய ஆதரவற்ற இல்லங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தனியார் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 45 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் இன்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் காப்பகத்தில் வேலை செய்யும் நபர்கள் அந்தப் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பெண்ணை பரிசோதித்த மருத்துவர் இவர் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சுப்பிரமணியம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் உள்ளவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இந்த சம்பவம் அறிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் காப்பகத்தில் இருப்பவர்கள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா, அல்லது கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் உறவினர்கள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பகங்களில் ஆதரவற்றோருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது சமூக ஆர்வலர்கள் சிலர்...,” மதுரையில் பல்வேறு காப்பகங்கள் தற்போதும் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர். நோயாளிகள் போல பாவிக்க வேண்டிய நபர்களை அடித்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion