Madurai : பார்வதி யானைக்கு புத்துணர்வு நீச்சல் குளம்.. மீனாட்சியம்மன் கோயிலில் திறந்து வைத்த நிதியமைச்சர்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 26 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் அருணாசல பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.
நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை & புள்ளியியல் துறை அமைச்சர் @ptrmadurai அவர்கள், அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.#madurai | @hari_rs_jo | @SRajaJourno | @Yogesh_DMK | #DMK pic.twitter.com/EDj4aDmEYL
— arunchinna (@arunreporter92) April 16, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்