மேலும் அறிய

watch video | மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரதநாட்டிய கலைஞர்!

நிகழ்ச்சியில் 'எல்லாம் வல்ல தாயே' என்ற பாடலுக்குதான் தனது மாணவர்களுடனும்  நடனம் ஆடிக்கொண்டிருந்த போது தீடீரென  நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார்.

தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தற்போது கிராம திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பாரம்பரிய  திருவிழாக்கள் நடைபெற்று, பக்தர்கள் நேற்றிக்கடனும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா  நடைபெற்றது.  இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 'எல்லாம் வல்ல தாயே' என்ற பாடலுக்குதான் தனது மாணவர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த பரத நாட்டிய கலைஞர் தீடீரென  நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார். பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய மாணவ, மாணவிகள் மற்றும் அவரது மகள், காளிதாஸ் அமர்ந்த சேர் நோக்கி வந்தபோது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேடையிலேயே நடன கலைஞர் காளிதாஸ் உயிர் பிரிந்தது தெரியவந்தது. இதை பார்த்த அவரது மகள், நடன கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியை காண வந்த அனைவரும் கண்ணீர் பெருக்குடன் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வைத்தனர். இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸ்க்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டிய மீது அதிக ஆர்வம் கொண்டதால் அவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் ஆடி வருகிறார். இவருக்கு பானு என்ற மனைவியும் பிரியதர்ஷினி என்ற மகளும், விஷ்வ ஹர்ஷன் என்ற மகனும் உள்ளனர். மகன் மிருதங்கம் வாசிப்பிலும், மகள் பரதமும் கற்றுக் கொண்டவர்கள்.

watch video |  மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரதநாட்டிய கலைஞர்!

காளிதாஸ் 'பிரிய கலாலயா என்ற' - என்ற பரத நாட்டியாலய பள்ளியும் வைத்து நடத்தி வருகிறார். இவர்  ஆடல் வல்லான் என்ற விருது, கெளரவ டாக்டர்  பட்டம், 1000க்கும் மேற்பட்ட சீல்டு, பதக்கம் என வாங்கிய காளிதாஸ் வரும் வருடத்தில் கலைமாமணி விருது கிடைக்கும் என தனது நண்பர்களிடம் தெரிவித்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய போது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget