மேலும் அறிய
Advertisement
ஆணாக மாறியவருடன் செல்ல இளம் பெண்ணுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி...!
பெண் மேஜர்; அவரது விருப்பத்தின்படி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் வழக்கு முடிக்கப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை மெட்ரோவில் (kcic) பணியாற்றிவரும் திருநம்பி ஒருவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் (டிரான்ஸ் மேன்) என்பது குறிப்பிடதக்கது. பெண்ணாக இருக்கும் போது தனக்குள் ஏற்பட்ட உடல் மாற்றத்தால் ஆணாக உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவ ஆலோசனைப்படி (hormone therapy) செய்து கொண்டு ஆணாக மாறியுள்ளார். அதனால் அவருடைய பெயரையும் சட்டப்படி மாற்றி பதிவு செய்துகொண்டார்.
இதை சற்று கவனிக்கவும் பாஸ் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுடன் கடந்த மூன்று வருடமாக பழகி வந்துள்ளார். இருவரும் மனம் உகந்து நெருங்கி பழங்கி வந்த நிலையில் 23 வயதுடைய பெண்ணின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வீட்டை அந்த இளம் பெண் விட்டு வெளியேறியுள்ளார். அப்போது கடலாடி காவல்நிலையத்திற்கும், ராமநாதபுரம் காவல்துறை எஸ்.பிக்கும் கடிதத்தை அனுப்பிவிட்டு சென்றுள்ளார். பின்னர் சென்னையில் உள்ள தனியார் பெண் விடுதியில் அவர் தங்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணின் பெற்றோர் அவரை பெண்கள் விடுதியில் இருந்து போலீஸ் உதவியுடன் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் (hormone therapy) செய்து கொண்ட ஆணாக மாறிய நபர் தனது தோழியான ஆந்த பெண்ணை காணவில்லை என (habeas corpus) ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரித்தோம். அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சேர்ந்து வாழ்கின்றனர். மனுதாரர் ஒரு டிரான்ஸ் மேன் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் பெண் கூறினார். பெண்ணின் தந்தை ஆட்சேபம் தெரிவித்தார். பெண் மேஜர்; அவரது விருப்பத்தின்படி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் வழக்கு முடிக்கப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மானாமதுரை : ”எல்லாத்துலயும் சேவை இருக்கணும்” - ஆபத்துக்காலங்களில் தோழனாய் நிற்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion