மேலும் அறிய

தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, பாடநூல் கழக தலைவர் லியோனி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப் புத்தகங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை - அமைச்சர் பெரியசாமி பேச்சு.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப் புத்தகங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி,  பாடநூல் கழக தலைவர் லியோனி

திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள தமிழக பாடநூல் கிடங்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என அதிகாரியிடம் விவரம் கேட்டறிந்தனர்.

Crime: இரவில் தூங்கச்சென்ற இளம்பெண் காலை உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்பு..! குழப்பத்தில் போலீஸ்..!
தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி,  பாடநூல் கழக தலைவர் லியோனி
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஏப்ரல் மாதமே தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஏப்ரல் மாதமே அனைத்து புத்தகங்களும் தயாராகி விட்டன. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 296 பள்ளிகள் உள்ளது. இதில் 200 பள்ளிகளுக்கு மேல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை விரைந்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய்விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தாலும் மற்ற பகுதியில் இருந்து யானை பார்ப்பதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர். மேகமலையிலிருந்து வந்த அரிசி கொம்பன் யானை தற்பொழுது மீண்டும் மேகமலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என தெரிவித்தார். 

தமிழக பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி,  பாடநூல் கழக தலைவர் லியோனி
இதனைத் தொடர்ந்து தமிழக பாடநூல் கழக தலைவர் லியோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகங்கள்  3 கோடியே 56 லட்சம்  தயாராக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு தேவையான இலவச பாட புத்தகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயாராக உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப்பை, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷூ என 11 பொருட்கள் 80 சதவிகிதம் தற்பொழுது தயாராக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் அனைத்து இலவச பொருட்களும் தயாராகிவிடும். முதலமைச்சர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி துவக்கி வைக்க உள்ளார். அரசு பள்ளிகளில் 75% பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி உள்ளது. ஆங்கில வழி கல்விக்கு ஆசைப்பட்டு ஏராளமான பொதுமக்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் மாணவனை சேர்த்தால் 7.5  சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் கல்லூரி வரை  இலவசமாக கல்வி கற்கலாம். ஆகவே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் டாக்டர் கலைஞர் பற்றி திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடத்தில் அவரைப் பற்றி ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget