மதுரையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் மற்றும் பிற ரயில்கள் குறித்த செய்தி உள்ளே
கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில், இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மத்திய பிரதேச மாநில முக்கிய நகரான ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27, ஜூலை 04, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரை - ஜபல்பூர் பாராளுமன்ற சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் நயின்பூர், பாலாகாட், கோன்டியா, நக்பிர், பலார்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களையும் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு தேர்தல் கால சிறப்பு ரயில்
பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ராஜபாளையம், தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06089) ஏப்ரல் 20 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06090) ஏப்ரல் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உசிலம்பட்டி ஒச்சம்மாள், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!