மேலும் அறிய

முல்லைப்பெரியாறு அணையில் நாளை துணை கண்காணிப்பு குழு ஆய்வு.,

தேனி மாவட்டம்  முல்லைப் பெரியாறு அணை.முல்லைப்பெரியாறு அணையில் நாளை துணை கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் பருவமழைகாலங்களில் பெய்யும் மழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், பருவ மழையையே நம்பியுள்ளன. கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இருமாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன. இந்த ஆண்டுக்கான மழை நிலவரம் குறித்த, நீண்ட கால கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்து இருந்தது அதன்படி, தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


முல்லைப்பெரியாறு அணையில் நாளை துணை கண்காணிப்பு குழு ஆய்வு.,

இந்த  நிலையில், தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் செய்து வேண்டிய பாதுகாப்பு மற்றும்  செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும் நாளை துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன் பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.


முல்லைப்பெரியாறு அணையில் நாளை துணை கண்காணிப்பு குழு ஆய்வு.,

தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு அதிகாரியுமான ராகேஷ் கஷ்யாப் உள்ளார். இந்தகுழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் உள்ளனர்.

DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில் நாளை துணை கண்காணிப்பு குழு ஆய்வு.,

இக்குழுவினர் கடந்த ஜூலை மாதம் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்க பணிகளையும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இந்த துணை குழுவினர் நாளை ஆய்வு செய்கின்றனர். கடந்த மாதம் ஜூன் 13 ல் உயர்நிலை கண்காணிப்பு குழுவினர் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள வெட்டப்படவேண்டிய மரங்கள் குறித்தும், அவை என்ன மரங்கள் என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில்,  பேபி அணையை பலப்படுத்த உள்ள அடுத்தகட்ட பணிகள் குறித்த முக்கிய ஆய்வாக இது இருக்கும் என தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget