ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!
தேனி மாவட்டத்தில் வீடுகளில், அலுவலகங்களில் அல்லது வேறு எங்கு பாம்புகள் வந்தாலும், அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடும் சேவையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார், சமூக ஆர்வலர் கண்ணன்.
தேனி மாவட்டத்தில் வீடுகளில், அலுவலகங்களில் அல்லது வேறு எங்கு பாம்புகள் வந்தாலும், அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடும் சேவையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார், சமூக ஆர்வலர் கண்ணன்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், தேனி கண்ணனுக்கு அப்படியில்லை பாம்பை கண்டால் பாசம் தான் வரும். அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும் புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறான்.
பாம்புகளுக்கு பொதுவாக அதிர்வுகளை உணரும் திறன் இருப்பதால் மறைந்தே அது வாழும் இயல்பு கொண்டது.ஒரு வேளை மறைந்துக் கொள்வதற்கு இடமில்லாத போது தன்னை மனிதர்கள் தாக்க வருவதைப் போல் அது உணர்ந்தால் தனது பாதுகாப்புக் கருதி தீண்டி விடும்.
தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.இவரை பொதுவாக பாம்பு கண்ணன் என்றே அழைக்கிறார்கள்.சிறு வயதில் படிக்க போதிய வசதி இல்லாததால், மீன் பிடிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது மீன் வலைகளில் சிக்கி இருக்கும் தண்ணி பாம்புகளை நீக்கும் போது ஏற்பட்டுள்ளது பாம்புகளை பிடிப்பதற்கான ஆர்வம். தற்போது வரை இவர் 12,000- க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விட்டுள்ளார்.
இந்த சேவை குறித்து நம்மிடம் கண்ணன் கூறியதாவது பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினம் ஆகும். அதனை மக்கள் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும் பாம்புகள் யார் வீட்டிலோ, வேறு எங்கு வந்தாலும் அதனை அடிக்காமல், என்னை போன்றோரை அல்லது தீயணைப்பு அதிகாரிகளை அழைத்து பாம்புகளை அப்புறப் படுத்துங்கள் என்பது எனது வேண்டுகோள்.
மேலும், நான் பாம்பு பிடிப்பதற்கான பணம் வாங்குவதில்லை. முழுக்க முழுக்க சேவையாகவே செய்கிறேன். யாரேனும் வீட்டில் அல்லது வேறு எங்காவது பாம்பு வந்துவிட்டது, பிடிக்க வாருங்கள் என்று என்னை அழைத்தால், நான் முதலில் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பேன். அடுத்த படியாக பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறை அதிகாரிகள் முன்பே அடர்ந்த வனத்தில் விட்டுவிடுவேன் என்றும், எனது வாழ்நாள் முழுவதும் இந்த பாம்புகளுக்கான சேவையை மட்டுமே செய்வேன் என்றார்.
மேலும் படிக்க
பார்க்க,
முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of