மேலும் அறிய
Advertisement
சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
’’மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாக படித்து பயன்பெற வேண்டும்'’
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகளில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டது. இன்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பாடம் எடுக்கப்பட்டுவரும் நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியர்கள் பாடம் எடுப்பது குறித்து கேட்ட ஆட்சியர் அங்கிருந்த மாணவர்களுக்கு தமிழ் இலக்கண பாடம் எடுத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவுரைப்படி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 71 அரசு உயர்நிலை பள்ளிகளும் 71 அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளும், 89 அரசு மேல்நிலை பள்ளிகளும், 69 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளும், 87 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளும், 28 சுயநிதி பள்ளிகளும் என 415 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களுக்கு பாடம் எடுக்க 5,443 ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பணிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டநாட்களுக்கு பின் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்கள் வருகை புரிவதால் ஒரு வாரகாலத்திற்கு அடிப்படை கல்வி வழங்கப்பட்டு பாடப்பிரிவிற்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்களும் இடைப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் படித்திருப்பீர்கள். அதற்குரிய விளக்கங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஆரம்பக்காலத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஆசிரியர்கள் மாணவியர்களின் பெற்றோர்களுடன் நேரடியாக கலந்தாலோசனை கூட்டம் மாணவர்களின் கல்விக்கு தூண்டுகோலாக இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து மாணவ, மாணவியர்களுக்கான அரசு விடுதிகளில் தனித்துணை ஆட்சியர் நிலை கொண்ட தனித்தனி அலுவலர் நியமித்து விடுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கண்காணிப்பதுடன், விடுதிகளுக்கு தேவையான கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கும் வகையில் அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். விடுதிக்காப்பாளர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதியுடன் கண்காணித்து செயல்படுவார்கள். மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாகப் படித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion