Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime Affair: தன்பாலின உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவியே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Crime Affair: தன்பாலின உறவால் அரங்கேற்றப்பட்ட கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்பாலின உறவால் கொலை:
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் அசோதர் பகுதியில் 40 வயது விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின், பின்புலம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதன்படி, இறந்த நபரின் மனைவியே தனது ஓரினச்சேர்க்கை தோழியுடன் சேர்ந்து, கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவல்துறை விசாரணை:
டிகெர் கிராமத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை கண்டெடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சுமர்சிங் என்பது அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம், பெஹ்ரம்பூரில் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான், கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி தான் தங்களுக்கு பணம் கொடுத்து இதை செய்ய சொன்ன அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரேணு மற்றும் மால்தி தேவி எனும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்பு டூ ஓரினச்சேர்க்கை
விசாரணையில் வெளியாகியுள்ள தகவ்களின்படி, சுமர் சிங்கின் மனைவி ரேணு, தங்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மால்தி தேவி என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆன நிலையில், கணவனை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த இரண்டு பெண்கள் இடையே நிலவிய நட்பானது நாளடைவில் ஓரினச்சேர்க்கையாக உருவெடுத்துள்ளது. ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அவர்கள் இந்த உறவை ரகசியமாக வைத்திருந்த நிலையில், இனி ஒருவரை விட்டு ஒருவர் வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால், ரேணு கணவனை விட்டு பிரிந்து மால்தி தேவியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டுள்ளார். அந்த சூழலில் மால்தி தேவியுடனான மனைவியின் உறவு சுமர் சிங்கிற்கு தெரிய வந்துள்ளது.
கணவனுடன் பிரச்னை.. கொலை செய்ய முடிவு..
மனைவி ரேணுவை தாக்கிய சுமர், இனி மால்தி தேவியுடன் பேசக்கூடாது, அவர் தங்களது வீட்டுப்பக்கமே வரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் மால்தி தேவி ரேணுவிற்கு, ஒரு சிறிய கையடக்க கீ-பேட் போனை வழங்கியுள்ளார். அதன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். அதுவும் நாளடைவில் வெளிச்சத்திற்கு வர, கணவன் மனைவி இடையே வார்த்தை மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது உறவை தொடர்வதில் சிக்கல் வலுவாவதை உணர்ந்ததும் சுமர் சிங்கை கொலை செய்ய, ரேணு மற்றும் மால்தி தேவி முடிவு செய்துள்ளனர்.
கூலிப்படை மூலம் கொலை
தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டும் நபரை அணுகிய மால்தி தேவி, சுமர் சிங்கை கொலை செய்தால் 60 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி, 8 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி அந்த ஆட்டோ ஓட்டுனர் தனது கூட்டளிகள் இரண்டு பேருடன் சேர்ந்து, சுமரை கழுத்தை நெறித்து மயக்கமடைய செய்த பிறகு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.























