Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(21-01-2026) 8 மணி நேர மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? BESCOM அறிவிப்பு
Bengaluru Power Cut: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21-01-26 )நகரின் முக்கிய இடங்களில் 08 மணி நேரம் மின் தடையை செய்யவுள்ளது.

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பனஸ்வாடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
எந்த பகுதியில் மின் தடை?
எச்ஆர்பிஆர் லேஅவுட் 1வது பிளாக், 2வது பிளாக், 3வது பிளாக், சர்வீஸ் ரோடு, கம்மனஹள்ளி மெயின் ரோடு, சிஎம்ஆர் ரோடு, பாபுசபால்யா, பாலச்சந்திரா லேஅவுட், ஃப்ளவர் கார்டன், எம்எம் கார்டன், அர்காவதி லேஅவுட், அவுட் லேக் அவுட், என் திவ்யா உன்னதி லேஅவுட், விஜயேந்திர கார்டன், பாலஜிஆர் கார்டன், ஜிஎன் ஆர். செலேகரே, செலேகரே கிராமம், சாமுத்ரிகா என்கிளேவ், 100 அடி சாலை, 80 அடி சாலை, சுஸ்தமலாவு, ஹப்பலவா முனிரெட்டி லேஅவுட், விஜயா வங்கி காலனி, நிசர்கா காலனி, நந்தனம் காலனி, அமர் ஏஜென்சி லேஅவுட், பி&டி லேஅவுட், ஷாயிர்வே கோலோன்ட், ஷாயிக்வௌட், லாகோனவுட், நகர், ஹென்னூர் கிராமம், பைரவா லேஅவுட், அவுட் சிக்கா லேஅவுட் CMR லேஅவுட், ஹென்னூர் கிராஸ், கெஞ்சப்பா கார்டன், பிருந்தாவன் லேஅவுட், ஹொய்சாலா நகர், பிருந்தாவன் அவென்யூ ஹெரிடேஜ், விநாயக லேஅவுட், ஜெயந்தி கிராமம், BDA வளாகம் எதிரில், நரேந்திர டென்ட் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்.
OMBR லேஅவுட் (பகுதி), கஸ்தூரி நகர் (பகுதி), பில்லாரெட்டி நகர் (பகுதி), காரவல்லி சாலை, ராமையா லேஅவுட், அஜ்மல்லப்பா லேஅவுட், தொட்டா பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர் மெயின் ரோடு, பி. சன்னசந்திரா, நஞ்சப்பா கார்டன், அகர் மெயின் ரோடு, தொட்டய்யா லேஅவுட், பேங்க் அவென்யூ, ஆர்.எஸ். பால்யா, ADMC மிலிட்டரி கேட், முனிசாமி சாலை, முனி வீரப்பா சாலை, குள்ளப்பா வட்டம், ராஜ்குமார் பார்க், மேகனா பால்யா, முனிஸ்வாமப்பா லேஅவுட், யெஷ் என்க்ளேவ், பஞ்சாரா லேஅவுட், விஜயலட்சுமி லேஅவுட், சன்பால்பட் என்கிளேவ் லேஅவுட், கிரீன் கார்டன் ஃபேஸ்-2, ப்ராஸ்பெரிட்டி எஸ்எல்வி லேஅவுட், பெத்தேல்வி லேஅவுட், பெத்தேல்வி லேஅவுட் அடுக்குமாடி குடியிருப்புகள், DS-MAX அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.






















