மேலும் அறிய

பூஜ்ஜிய நிழல் தினத்தை செயல்விளக்கத்துடன் எடுத்துக்கூறி அசத்திய தேவகோட்டை பள்ளி மாணவர்கள் !

பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் உருளை வடிவ பொருளை வைத்து பூஜ்ஜிய நிழல் தினத்தை செயல்விளக்கமாக செய்து பார்த்தனர். மேலும், பொதுமக்களுக்கு அதன் அறிவியல் உண்மைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குடியிருப்பு பகுதிகளில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள். பூஜ்ஜிய நிழல் தினத்தை செயல்விளக்கத்துடன் எடுத்துக்கூறி அசத்திய மாணவர்கள்
 
நிழல் தெரியாததை பொதுமக்களும் பெற்றோர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு ‘பூஜ்ஜிய நிழல் தினம்’ குறித்த அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விடுமுறை காலமாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பூஜ்ஜிய நிழல் தினத்தின் அறிவியல் காரணங்களை விளக்கினர். திறந்த வெளியில் நின்றபோது சூரியக் கதிர்கள் நேரடியாக காலடியில் விழுந்து, அருகில் நிழல் தெரியாததை பொதுமக்களும் பெற்றோர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும்
 
பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும். சூரியனின் தோற்றநிலை அட்சரேகைக்கு சமமாக அமையும் நேரத்தில், சூரியக் கதிர்கள் பொருட்களின் மீது செங்குத்தாக விழுவதால் அவற்றின் நிழல் அந்தப் பொருளின் அடிப்பகுதிக்குள் விழும். இதனால் வெளிப்புறமாக நிழல் தெரியாது. அந்தந்த பகுதியின் அட்சரேகைக்கு ஏற்ப பூஜ்ஜிய நிழல் தினத்தின் தேதி மாறுபடும் என்று மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, சிவரஞ்சனி, ஆர்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் விளக்கமளித்தனர்.
 
அறிவியல் உண்மைகளை எளிய முறையில் புரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உதவியது.
 
இதனைத் தொடர்ந்து மாணவிகள் ரித்திகா, நந்தனா, மாலினி, லேகாஸ்ரீ, ஸ்டெபி மற்றும் மாணவர் அசுவத் ஆகியோர் நடராஜபுரம் , திருவள்ளுவர் தெரு, சத்தியமூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் அருகில் உருளை வடிவ பொருளை வைத்து பூஜ்ஜிய நிழல் நிகழ்வை செயல்விளக்கமாக செய்து பார்த்தனர். மேலும், தங்களுடன் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை விளக்கினர். கட்டு கதைகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாளில் தேவகோட்டை பகுதியில் மதியம் 12.25 மணி அளவில் இந்த நிகழ்வு ஏற்படும் என்றும் விளக்கினார்கள். மாணவர்களின் இந்த முயற்சி குடியிருப்பு பகுதிகளில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை எளிய முறையில் புரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உதவியது.

Advertisement

தலைப்பு செய்திகள்

SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
பழனியில் நவராத்திரி விழா காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரம்!
பழனியில் நவராத்திரி விழா காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரம்!
மானாமதுரை மணல் கடத்தல்: JCB சிக்கியது, 3 பேர் கைது... தப்பியோடிய லாரிக்கு போலீஸ் வலைவீச்சு !
மானாமதுரை மணல் கடத்தல்: JCB சிக்கியது, 3 பேர் கைது... தப்பியோடிய லாரிக்கு போலீஸ் வலைவீச்சு !
மகாளய அமாவாசை: கோவிலூர் கொற்றாலீஸ்வரர் ஆலயத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
மகாளய அமாவாசை: கோவிலூர் கொற்றாலீஸ்வரர் ஆலயத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Embed widget