மேலும் அறிய
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவகலத்திற்கு வருகை தரும் நபர்களின் விபரங்கள் கேட்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் இல்லம்
Source : whatsapp
மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவுகள் எதிரொலி - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக இல்லம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு*
மகா தீபம் ஏற்றப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை கோவிலின் மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற அளித்த இடைக்கால தீர்ப்பு படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபம் ஏற்றப்படவில்லை, இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாரம்பரிய முறைப்படி ஆகமவிதியை பின்பற்றி வழக்கான இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று இரவு திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சமூகவலைதள பக்கங்களில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பதிவு செய்துவந்தனர். இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மதுரை நத்தம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவகலத்திற்கு வருகை
குடியிருப்பு முன்பாக காவல் ரோந்து வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நுழைவாயில் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவகலத்திற்கு வருகை தரும் நபர்களின் விபரங்கள் கேட்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















