மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தூண் தீபம்: போராடிய 300 பேர் மீது வழக்குப் பதிவு!
அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
Source : whatsapp
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு*
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒரு நாள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது இருந்தபோதிலும் திருப்பரங்குன்றம் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் மேல் தளத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணி இந்து அமைப்பினர் உட்பட ஏராளமானூர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து நேற்று இரவு விடுவித்தனர்.
தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















