ஊரைச் சுற்றி ஒரு லாரி அளவு கோழிகளை வீசிச்சென்ற நபர்கள்.. நாட்டாகுடியில் துர்நாற்ற அலை
இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி, கோழிகளை வீசிச்சென்ற நபர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
குடிநீருக்காக அவர்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தண்ணீர் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டாகுடி கிராமத்தை சுற்றி ஒரு லாரி அளவு இறந்த கோழிகளை வீசிச் சென்றுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரைச் சுற்றி இறந்த கோழிகளால் நாற்றம்
”ஊர் முழுக்க மூக்கை பிடிக்க வைக்கும் வீச்சம். குடலை பிரட்டும் துர்நாற்றத்தால் சோறு கூட சாப்பிட முடியவில்லை. மனுச, மக்க தூங்க முடியவில்லை. நோய் வந்துருமோனு பயமா இருக்கு. எந்த பாவி, பரப்பான் செஞ்சானோ தெரியல எங்க ஊர்ல வந்து செத்த கோழியெல்லாம் கொட்டிட்டு போய்டானுங்க. மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் வடித்தபடி பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
- மத்திய அரசை ஸ்டாலின் கண்டிக்காமல் நன்றி தீர்மானம் தெரிவிக்கிறார் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
ஊரே துர்நாற்றம் வீசுகிறது.
சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம். நாட்டாக்குடி, சித்தலூர், இளங்குடி, மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 400 ஏக்கரில் விவசாயமும் நடந்து வருகிறது. நாட்டாகுடி செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் 500க்கும் மேற்பட்ட மடிந்த கோழிகளை கொட்டிச் சென்றதால் ஊரே துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தால் உணவு அருந்த முடியாமலும், தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் ஊரில் இருந்து பல குடும்பங்கள் சிவகங்கை பகுதியில் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஏற்கனவே நாட்டாகுடியில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் உப்பாற்றில் சென்று அகப்பை வைத்து காத்திருந்து, தண்ணீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது ஆழ்குழாய் கிணறு அமைத்து, தண்ணீர் வசதி அமைத்து கொடுத்ததால் கிராமத்தில் ஓரளவு நிம்மதியோடு வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் கோழிக் கழிவுகளையும், இறந்த கோழிகளையும் கிராம பகுதியில் கொட்டிச் செல்வதால் கிராமமே துர்நாற்றம் வீசுகிறது.
இதனை அரசு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரு லாரி அளவு இறந்த கோழிகள்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில்..,”சிவகங்கை மாவட்டத்தில் நாட்டாகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக அவர்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தண்ணீர் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டாகுடி கிராமத்தை சுற்றி ஒரு லாரி அளவு இறந்த கோழிகளை வீசிச் சென்றுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஊர் முழுக்க நாற்ற அலை வீசுகிறது. கிராமத்தை கடந்து செல்வது கூட சிரமாக உள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கோழிகளை இங்கு வீசிச்சென்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vaazhai Trailer : கதறி அழவைப்பது உறுதி.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் டிரைலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?