மேலும் அறிய

சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒருங்கிணைத்த கல்வெட்டு ஒப்படைப்பு

உலக மரபு நாள் கட்டுரை போட்டி பரிசளிப்பு, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு
 
சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சில நாள்களுக்கு முன்னர் பழச்சாறு கடைக்கு முன்பகுதியில் இருந்து 224 ஆண்டு பழமையான 1800 ஆம் ஆண்டு சிவகங்கை ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்து அடையாளப்படுத்தினர். கல்வெட்டை முறையாக சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கையில் உலக மரபு நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் இந்நாளை கல்லூரி, பள்ளிகளில் கருத்தரங்கு நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கினர். 
 
தொல்நடைபயண கையேடு

பள்ளியளவில் மூன்றாம் இடத்தை பிடித்த இருவருக்கு தனித்தனியே ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக் குழுவில் பயணிக்கும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் துணைத் தலைவர் மாநில நல்லாசிரியர் ம.முனீஸ்வரன் அவர்கள் பணி நிறைவு பெற்றதை ஒட்டியும் சிவகங்கை தொல்நடை பயணத்தில் தொல்நடைப் பயண கையேடு வெளியிடுவதில் சிறந்த பங்காற்றிவருவதற்கும் அவரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரி சாமி  வரவேற்புரை உரைத்தார், சிவகங்கை தொல்நடைக் குழுத்தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகிதார், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா முன்னிலை வகித்தார், சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் மேதகு ராணி  மதுராந்தகி நாச்சியார் அவர்களும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
 
பலரும் பங்கேற்பு

சிவகங்கை மன்னர் பள்ளி குழும செயலர் குமரகுரு, சிவகங்கை அணு இதழ் ஓவியர் முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி, பணி நிறைவு பெற்ற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர், நிகழ்வின் இறுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு பொருளாளர் ம.பிரபாகரன் நன்றி உரைத்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், செய்திருந்தார். இதில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, பள்ளி கல்லூரி மாணவர்கள்,சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் முத்துக்குமரன், பாலமுருகன், சார்பு ஆய்வாளர் காளீஸ்வரன், இலக்கிய வடிவு, அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget