மேலும் அறிய

கோடை மழையில் இடி மின்னல் தாக்குதல்.. உயிர்காக்கும் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!

கோடை மழையின் போது இடி மற்றும் மின்னல் தாக்கத்தினால், பொது மக்கள் உரிய  முன்னெச்சரிக்கை   நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி  கவனமாக இருந்திடல் வேண்டும்.

வரும் நாட்களில் கோடை மழையின் போது வழக்கத்தைவிட இயற்கை பேரிடரால் மனித உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுவதால் இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது, பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், கவனமாக இருக்கும்படியும் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
 
உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்தவும். உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டிடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்குச் செல்லுங்கள். வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு விலகுங்கள். குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்திற்குள் அழைத்து செல்லவும். இறுதி இடி முழக்கத்திலிருந்து 30 நிமிடங்கள் ஆகும் வரை வீட்டிற்குள் இருங்கள். ஆபத்தான இடங்களிலிருந்து விலகி இருங்கள்.
 
குழுவாக  இருந்தால், இடைவெளி விட்டு  நில்லுங்கள்.
 
மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்க வேண்டாம். பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் மற்றும் பிற திறந்தவெளி கூடாரங்களைத் தவிர்க்கவும். திறந்த வெளிகள், கடற்கரைகள், மலை உச்சி மற்றும் ஆற்றங்கரைகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும். நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்கவும். உலோக வேலிகள், கம்பங்கள், வாயில்கள் மற்றும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்கவும். திறந்த வெளியில் இருப்பதை தவிர்க்கவும். உங்களால் தங்குமிடத்தை அடைய முடியாவிட்டால் தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமருங்கள். தரையை தொடுவதைதவிர்க்கவும். தரையில் மல்லாந்து படுக்காதீர்கள். குழுவாக  இருந்தால், இடைவெளி விட்டு  நில்லுங்கள்.
 
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள் ஜன்னல், கதவு, பால்கனி மற்றும்  வரண்டா அருகில் நிற்பதை தவிர்க்கவும். குழாய்கள், ஷவர்கள் அல்லது பிற நீர்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம். மின் சாதனங்களின்  மின் இணைப்பைத் துண்டிக்கவும். செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச் சங்கிலியால் கட்டுவதை தவிர்க்கவும். வாகனத்தில் இருந்தால், ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருங்கள்.
 
மின்னல் தாக்கிய ஒருவருக்கு உதவுவது எப்படி
 
மின்னல் தாக்கியவரிடம் மின்சாரம் இருக்காது “அவரைத் தொடுவது பாதுகாப்பனது. அவரைப் பாதுகாப்பான, உலர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவும். சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சரிபார்க்கவும். அந்த நபர் சுவாசிவிக்கவில்லை என்றால், அவருக்கு சிபிஆர் (CPR) செய்யத் தொடங்குங்கள். அவசர மருத்துவ சேவைகளை உடனடியாக அழைக்கவும்.
 
தயாராக இருங்கள்
 
அதிகாரப்பூர்வ வானிலை எச்சக்கைகளையும், TN Alert மொபைல் செயலியையும் பின்பற்றவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு இருக்கும்போது வெளிப்புறப் பணிகளைத் தவிர்க்கவும். கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு  இடமாற்றம் செய்யவும். வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான கிளைகளையும், மரங்களையும் வெட்டி ஒழுங்குபடுத்தவும்.
 
இடி, மின்னலுக்கு பிறகு கவனமாக இருங்கள்
 
அறுந்து விழுந்த மின் கம்பிகளையும், சேதமடைந்த மின் கம்பங்களையும் கவனிக்கவும்.  ஆபத்துகளை உடனடியாகத் தெரிவிக்கவும்.மின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றைச் சரிபார்க்கவும். வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கவனிக்கவும். மேலும், பருவநிலை மாற்றங்களினால் இவ்வாண்டு கோடை மழையின் தாக்கத்தின் காரணமாக இயற்கை பேரிடரால் மனித உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுபதால் இடி மற்றும் மின்னல் தாக்கததின் போது பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொண்டு மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டும்.

தலைப்பு செய்திகள்

மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget