மேலும் அறிய

சீமானை இந்நேரம் உள்ள பிடிச்சு போட்டிருக்க வேண்டாமா..? - செல்லூர் ராஜூ காட்டம் !

வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - செல்லூர் ராஜூ பேட்டி.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழன்னை சிலைக்கு மரியாதை

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில், அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும்.
 

பெரியார் நினைவிடத்தில் நாடகம்

 
தந்தை பெரியார் நினைவிடத்திற்கு செல்லக்கூடிய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது தான் இதுவெல்லாம் நாடகம் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தமிழுக்காக அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியுள்ளனர். கோவையில் கலைஞர் செம்மொழி மாநாடு நடத்தினார். அதில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி போராடினார்.
 

டங்ஸ்டன் திட்டம்

டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என பத்து மாதமாக முதலமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. 10 மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூப்பறிக்க சென்றார்களா?, 10 மாதங்களாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்களா?, சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை அடுத்த தான் முதலமைச்சர் விழித்துக் கொண்டு எதிர்கிறோம் என கூறினார். இனிவரும் ஒரு ஆண்டு முழுவதும் திமுகவின் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  மக்களை ஏமாற்றுவதற்காக திமுக பல்வேறு வேஷங்களை போடும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மாய, மந்திர பெட்டிகளை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடித்து சொல்கிறேன் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராது.
 

தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நாடக நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் மிக விழிப்போடு உள்ளனர்.  திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தி.மு.கவை நேற்று வரை ஆதரித்த இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேங்கை வயில் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என பேசுகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
 
 

தலைப்பு செய்திகள்

பழனி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தம்: பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்!
பழனி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தம்: பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்!
பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்
பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்
மதுரையில் (18.07.2026) நாளை மின்தடை... பைனல் லிஸ்ட் இது தான் - முழு விவரம் !
மதுரையில் (18.07.2026) நாளை மின்தடை... பைனல் லிஸ்ட் இது தான் - முழு விவரம் !
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Yamaha EC-06 Review: ஒரே சார்ஜில் 169 கிமீ மைலேஜ்; யமஹா EC-06 செயல்திறன் சோதனையில் ஜெயித்ததா.? இதோ ரிவ்யூவ்
ஒரே சார்ஜில் 169 கிமீ மைலேஜ்; யமஹா EC-06 செயல்திறன் சோதனையில் ஜெயித்ததா.? இதோ ரிவ்யூவ்
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Embed widget