மேலும் அறிய

தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் - செல்லூர் ராஜூ

உதயநிதி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வேன் சொன்னார், ஆனால் நீட் தேர்வை உறுதி செய்தது முன்னாள் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி நீதிமன்றத்தில் வாதடியவர்.

மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்...,” மாணவர், இளைஞர்களை பார்க்கும் போது மலரும் நினைவுகளாக வருகிறது. சிறுவனாக இருக்கும் போது உசிலம்பட்டி வரைசென்று மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் பங்கேற்பேன். உலகத்தை ஒரு நொடியில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு தற்போது காலங்கள் மாறிவிட்டது.

தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் - செல்லூர் ராஜூ
உலகத்தில் எந்த மொழிக்காகவும் இதுபோன்ற உயிர் தியாகத்தை யாரும் செய்தது கிடையாது. தங்கள் எதிர்காலத்தை மறந்து தங்கள் இன்னுயிரை நீந்து தமிழை காத்தவர்கள் தமிழர்கள். 1964ல் மத்திய அரசு இந்தியை திணித்தபோது மாநில காங்கிரஸ் அரசு இந்தியை ஏற்றுக்கொள்வதை கண்டித்து முதல் குரல் கொடுத்தவர் அண்ணா. மொழிப்போர் தியாகிகளை கொண்டாடுவதற்கு உரிமை உள்ள உண்மையான வாரிசு அதிமுக தான். மொழிப்போர் தியாகிகளை கொண்டாட உரிமையும் அருகதையும் திமுகவுக்கு கிடையாது. கருணாநிதியின் குடும்பம் புத்தகம் எழுதியும், படம் எடுத்தும் வருமானம் பார்ப்பார்கள். ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்காக எதையும் எந்த தியாகத்தையும் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தமிழ்மொழிக்கு தியாகம் செய்த கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியில் தான் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. செம்மொழி மாநாடு என்ற பெயரில் குடும்ப விழாவை மட்டுமே கருணாநிதி நடத்தி தமிழறிஞர்களை அவமதித்தார்.

தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் - செல்லூர் ராஜூ
அதிமுக காலத்தில் தான் உலகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க நிதி கொடுக்கப்பட்டது. அன்னப்பறவையை போல தண்ணீரையும் பாலையும் பிரிப்பது போல நல்ல கருத்துக்களை மட்டுமே பார்க்க வேண்டும். சிங்கமாக கர்ஜித்தவர், புலியாக பாய்ந்த வைகோ இன்று திமுகவோடு சேர்ந்து புலி பூனையாகிவிட்டது போல மாறிவிட்டார். திமுகவில் எதை எதிர்த்து வெளியேறினாரோ, எந்த வாரிசு அரசியலை எதிர்த்து தாக்கி பேசினாரோ அந்த வைகோ தான் தன் மகன் துரை வைகோவை தலைவராக்கிவிட்டார். தமிழ்நாட்டு மக்களை கலைஞர் குடும்பம் தொடர்ந்து ஏமாற்றி கொண்டே இருக்கிறது. முதலில் கலைஞர் ஏமாற்றினார். தற்போது ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி கொண்டுள்ளார். நீட் தேர்வு ரத்து என மருத்துவ மாணவர்களை ஏமாற்றி, பெண்களை ஏமாற்ற கேஸ் மானியம், மாணவர்களை ஏமாற்ற கல்விக்கடன் ரத்து, அரசு ஊழியர்களை ஏமாற்ற பழைய ஓய்வூதியம் என சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகன் நட்டி பாணியில் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியை பிடித்தார்.

தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் - செல்லூர் ராஜூ
 
உதயநிதி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வேன் சொன்னார், ஆனால் நீட் தேர்வை உறுதி செய்தது முன்னாள் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி நீதிமன்றத்தில் வாதடியவர். இந்தநிலையில் காங்கிரஸ் உடன் கூட்டணி என மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி மற்றும் அவரின் வாரிசுக்கு திமுக தலைவராவார்கள். ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம். அந்த பள்ளியில் முதல் மொழி ஆங்கிலம், அடுத்த மொழியாக இந்தி உள்ளது. உதயநிதி நடத்தும் நிறுவனமான ரெட்ஜெயண்ட் தமிழ்பெயரா? சன்டிவி தமிழா? ஸ்டாலின் தமிழ் பெயரா? சின்னச்சாமி என பெயரை மாற்றலாமே. அடுத்த தேர்தலில் திமுகவை வச்சு செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget