Lok Sabha Elections 2024: பரப்புரையில் பலூனை உடைத்து விளையாடிய செல்லூர் ராஜூ, சரவணன் - மதுரையில் கலகலப்பு
தேர்தல் பரப்புரையின்போது, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் பலூனை உடைத்தும் அதை பறக்கவிட்டும் விளையாடினார்.
தேர்தல் திருவிழா 2024
வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
மல்லுகட்டும் மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் பி.ஜே.பி., வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களை காட்டிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் எம்.பி., சு.வெங்கடேசனுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் மதுரையில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்லமுடியாத நிலையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே.ராஜூவும், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் டாக்டர் சரவணன் வாக்கு சேகரிக்கும் போது பலூன்களுடன் செல்லூர் ராஜூவும், வேட்பாளர் சரவணனும் விளையாடியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மதுரை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, குழந்தையாக மாறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வேட்பாளர் சரவணன் பலூன்களை மேலே தள்ளி விளையாண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.@SellurKRajuoffl | #Madurai | #ADMK | #Elections2024 | #டாக்டர்சரவணன் pic.twitter.com/gPTD6QlLYW
— arunchinna (@arunreporter92) April 13, 2024