இட்லி பாத்திரங்களை பறிமுதல் செய்த வணிகவரித்துறை...! - ஏன் தெரியுமா?
உரிய ஆவணங்கள் இன்றி பொருட்கள் கொண்டு சென்றதால் 51ஆயிரத்து 840 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே வணிக வரித்துறை சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
வணிக வரித்துறை சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பெரிய அளவிலான இட்லி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. pic.twitter.com/x05lnkNcCi
— Arunchinna (@iamarunchinna) March 16, 2022
மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உரிய அனுமதி இல்லாமல் எந்தவித ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள பெரிய அளவிலான இட்லி செய்யும் அலுமினிய சமையல் பாத்திரங்களை எடுத்து சென்ற மினி வேனை வணிகவரி அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தனர். pic.twitter.com/VOlrXr77Bw
— Arunchinna (@iamarunchinna) March 16, 2022