Sathankulam Case : "விசாரணைக்கு வருபவர்களை அடிப்பதே வழக்கம்.."- சாத்தான்குளம் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம்
சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு வருபவர்களை அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர் என்று தலைமை காவலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சி.பி.ஐ., தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
#சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு வருபவர்களை அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர் - தலைமை காவலர் சாட்சியம் - 18ஆம் தேதி விசாரணை ஒத்திவைப்பு.
— arunchinna (@arunreporter92) October 15, 2022
Further reports to follow -@abpnadu
| #madurai | #court | pic.twitter.com/CbuZQeHhwn