மேலும் அறிய
ஆடி மாசத்தில் சசிகலா சென்றிருப்பது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலாப் பயணம் - ஆர்.பி.உதயகுமார்
சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. - சசிகலாவை சாடிய ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whats app
ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை
மதுரை சமயநல்லூர் பகுதியில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 33 ஆண்டுகள் அம்மாவுடன் நான் (சசிகலா) இருந்து ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்தினேன் என்று தனக்குத்தானே பிரச்சாரத்தில் முன்னிலைப் படுத்துகிறார். ஆனால் தங்கள் சார்ந்த சமுதாயம் வறுமையில் கீழே உள்ளார்களே, அவர்கள் கஷ்டம் தீர்க்க என்ன முயற்சி எடுத்தார்? கல்வியிலே, பொருளாதாரத்திலா?. பின்தங்கிய மக்கள் செத்துச் செத்துப் பிழைக்கின்றனர். அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதை சொல்லத் தயாரா? இந்த பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை., ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.
கண் கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம்
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நம்பிக்கையான தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பல அதிமுக மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்.? அம்மா காரணம் இல்லை இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள (சசிகலா)தான் காரணம். ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணம் சென்று இருக்கிறார். கண் கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உள்ளது. அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால், எதுவும் செய்யவில்லை. காலமும் அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா..? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மக்களும் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை.
கறந்த பால் மடியேறாது
எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிரீர்களா.? யார் இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும். கடந்த 2021 தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்.? இதில் எதை ஏற்றுக்கொள்ளவது? மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜானகிஅம்மாள் அவர்கள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடியார் கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும். கறந்த பால் மடியேறாது கருவாடு மீனாகாது என்பது போல மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Red Alert: நீலகிரிக்கு ரெட் அலர்ட், கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















