மேலும் அறிய
Advertisement
2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்காத மதுரை கலைஞர் நூலகம் - ஆர்.பி.உதயகுமார் எழுப்பும் கேள்விகள்
கள நிலவரத்தை தெரிந்து கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
மதுரை தத்தளிக்கிறது
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் பெய்து வருகிற கோடை மழையிலே மதுரை தத்தளித்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம். அதிலே குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த மூன்று ஆண்டு சாதனையாக மதுரையிலே அடையாளமாக சொல்லப்படுகிற கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம். இந்த நூலகத்திலே மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் அவர்கள் மறுப்பார்கள், அதனால் தான் அதனுடைய புகைப்படத்தோடு இதை அரசினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன். இரண்டு பிரிவுகள் தற்காலிகமாக மூடல் என்கிற ஒரு சாதனையை நாம் பார்க்கின்றோம், தற்போது தான் இந்த நூலகம் அரசின் சாதனையாக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மதுரையிலே நாங்கள் கலைஞர் நூலகத்தையும், ஜல்லிக்கட்டு ஏர் தழுவுதல் அரங்கமும் கட்டியிருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கலைஞர் நூலகத்தில் 2 பிரிவு மூடப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு மின்சார கட்டணம் அரசுக்கு செலுத்தவில்லை என்று பத்திரிகை செய்தி வெளியான பிறகு தான் அங்கே மின்சார கட்டணம் செலுத்தப்பட்டது என்ற உண்மை நிலவரம் முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அதுபோல கலைஞர் நூலகத்திலே கீழ் தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவு, கலைக்கூடம்பிரிவு கனமழையில் மூடப்பட்டு இருக்கிறது. இன்று இரண்டு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிற இந்த செய்தி முதலமைச்சர் நன்கு அறிவாரா என்று நமக்கு தெரியவில்லை. இந்த நூலகம் அரசின் சாதனையாக பறைசாற்றப்பட்டது. ஆனால் சாதனை வேதனையாக மாறி இருக்கிறது. இதை முதலமைச்சர் சீர்படுத்த முன்வருவாரா? அது மட்டுமல்ல மதுரையில் இருக்கிற மையமாக இருக்கிற மாட்டுத்தாவணி உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களும் இன்றைக்கு நோய் தொற்று பரப்புகின்ற ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
தொடர்ந்து பெய்து வருகிற மழையாலே காய்கறிகள் வாங்குவதற்கும், பூ வாங்குவதற்கும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டை நுழையும் முன்பே நோய்களை வாங்கும் நிலையை சீர் செய்ய மதுரை மாவட்ட நிர்வாக முன்வருமா? என்று மதுரை மாவட்ட மக்கள் இங்கே வேதனையோடு தங்களுடைய கவலையை தெரிவிக்கின்றார்கள். தினந்தோறும் 10,000 மேற்பட்டவர்கள் அங்கே ஆண்களும், பெண்களும் பொருட்களை வாங்கி சொல்லுகின்றார்கள் அப்படி செல்கின்ற அந்த நிலைமையிலே அங்கே போதிய கழிப்பறை வசதிகள் இல்லை என்று ஏற்கனவே எடப்பாடியார் உடனடியாக சீர்படுத்தி நடவடிக்கை வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தார்கள். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தூளாக்க மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டி வைப்பதால் அங்கே புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிற ஒரு கொடுமையான நிலையை நாம் பார்க்கிறோம். ஒரு நாள் மழைக்கே மார்க்கெட் தாங்காமல் மார்க்கெட் நுழைவு வாசலில் சாக்கடை தண்ணி ஓடுகிறது .
தண்ணீர் தேங்குகிறது
கலைஞர் நூலகம் அரசின் சாதனையாக மூன்றாண்டு சாதனையாக பார்க்கப்பட்ட நூலகம் இன்றைக்கு படிப்பதற்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை சீர்படுத்துவதற்கும் ஏற்கனவே சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் எடப்பாடியார் வழிகாட்டுதலோடு எடுத்து வைத்தேன். அப்போது மாவட்ட அமைச்சர்கள் அந்த செய்தியிலே உண்மை இல்லை என்று மறுத்தார்கள், ஆனால் எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை என்பதை போல, இப்போது வெட்ட வெளிச்சமாக இந்த ஒரு நாள் மழைக்கே இங்கு இரண்டு தளங்கள் இரண்டு பிரிவுகள் இன்றைக்கு மூடப்பட்டுள்ள காட்சி சாட்சியாக உள்ளது. தண்ணீரை வெளியேற்றி இங்கே வருகிற மக்களை படிப்பதற்கு நீங்கள் வசதிகள் செய்து தர முன்வருவீர்களா? அரசு உண்மையை ஏற்றுக் கொள்ளுமா? கள நிலவரத்தை தெரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion