மேலும் அறிய
Advertisement
என்னடா இரட்டை இலை சின்னத்தை காணோம்னு சொல்லக் கூடாது; நீங்க முரசுக்கு வாக்களிக்கணும்: உதயகுமார் கலகல
மத்திய அரசிடம் போராடாமல் அங்கே டீயும், பக்கோடாவும் சாப்பிட்டு உங்களிடம் வாக்கு கேட்கிறார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.
ஆர்.பி.உதயகுமார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செக்கானூரணி, கிண்ணிமங்கலம், புளியங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்..,” விஜய்பிரபாகரன் நினைத்தால் 40 தொகுதியில் எங்கு வேண்டுமானால் போட்டியிட்டு இருக்கலாம். ஆனால் அவர் குலம் காக்கின்ற குலசாமி திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது. குலசாமி ஆசையில் மக்கள் ஆசையில் விருதுநகர் தொகுதியில் அவர் மக்களை நம்பி போட்டியிடுகிறார். வீட்டு கதவை மட்டுமல்ல இதய கதவையும் திறந்து வைத்தவர் விஜயபிரபாகரன். பத்தாண்டு காலம் மாணிக்தாகூருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தீர்கள் எதையும் செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எடப்பாடியார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி வாய் திறக்கவில்லை. இதே விஜய பிரபாகரன் எங்கள் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் உரிமைக்குரல் கொடுத்து கட்டிடத்தை கொண்டு வந்திருப்பார். மத்திய அரசிடம் போராடி பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது புல்பூண்டு முளைத்துள்ளது அதற்கு மத்திய அரசிடம் போராடாமல் அங்கே டீயும், பக்கோடாவும் சாப்பிட்டு உங்களிடம் வாக்கு கேட்கிறார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர். மற்றொருவர் ராதிகா சரத்குமார் பிஜேபியில் சேர்ந்திருக்கிறார். பிஜேபியின் கொள்கை கோட்பாடு என்ன.? அட்டிகா விளம்பரம் போல் ஏமாந்துட்டியே சரத்குமார் என்பதைப் போல இன்றைக்கு கட்சியை ஒரு சீட்டுக்கு அடமானம் வைத்துள்ளார். நமது சின்னம் கொட்டு முரசு நமது சின்னம் கொட்டு முரசு.!. நாலாம் நம்பர் பட்டன் அமுத்தினால் விஜய பிரபாகரன் டெல்லிக்கு சென்று விடுவார். உதயகுமார் வந்து வாக்கு சேகரித்தார். இரட்டை இலை சின்னத்தை காணோம் என்று தான் சொல்ல கூடாது.! விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணிக் கட்சி தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டி இடுகிறார். வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசை எண் நான்கில் வாக்களியுங்கள் என்றார்.
வாக்கு சேகரித்த வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசுகையில்
அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், பார்வேர்ட் பிளாக், எஸ்டிபிஐ, புதிய பாரதம் என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றிக்கான கூட்டணி இந்த கூட்டணி நல்ல கூட்டணி. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளரான நான் கண்டிப்பாக உங்களுக்கு வேண்டிய அனைத்து பிரச்சனைகளுமே உங்க வீட்டு மகனாக உங்க வீட்டுப் பிள்ளையாக இந்த மண்ணின் மைந்தனாக செய்வேன்., வேறு யார் உங்களுக்கு செய்யப்போறார்.? விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பேசினார். அதிமுக, தேமுதிக இரண்டுமே ஒரே கட்சி., ஒரே கொள்கை உள்ள கட்சி இது மக்களுக்கான கட்சி ஜெயிக்கிற கட்சி என்றும், மக்கள் பசி என்று அழுதால் சோறு போடுகின்ற கட்சி, மக்களுக்கு பசி என்று வந்தால் சோறு போட்டு அழகு பார்த்த தலைவர்களைக் கொண்ட கட்சி.! இந்த தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளர் வாக்களிச்சிட்டீங்க இந்த முறை முரசு சின்னத்துல எனக்கு வாக்களியுங்கள். ஏப்ரல் 19 முரசு சின்னம் வாக்கு இயந்திரத்தில் நாலாம் நம்பரில் இருக்கலாம் ஜூன் 4-ல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் முரசு முதலிடத்தில் இருக்கும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion