வீட்டுக்கு வராமல் வீதிக்கு வந்த டோக்கன்; விநியோகத்தில் கும்மாங்குத்து குஸ்தி!

வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்தும், ரேசன் பணியாளர்கள் வீதியில் வைத்து டோக்கன் வழங்க முயற்சித்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

காரைக்குடியில் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் பெறுவதில், இருவருக்கு வாய்தகராரு ஏற்பட்டு பின் அடிதடி சண்டையில்  முடிந்ததால், ரேசன் கடை பணியாளர் டோக்கன் வழங்குவதை நிறுத்தி விட்டு நடையை கட்டினார்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஏழை எளியோர் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரேசன் கடைகள் தினந்தோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12  மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதித்து ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. 

குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் பொருட்கள் பெற டோக்கன்கள் முறையில் சமூக இடைவெளியுடன் பொருட்களை பெற்றுச் செல்ல மக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த நியாய விலை கடைகளில் டோக்கன் முறையில் ஜுன் மாத பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்ததுள்ளது.  ஜீன் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரேசன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டை தாரர்களின் இல்லங்களுக்கே சென்று டோக்கன் வழங்குவார்கள் என்று அறிவித்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜூன் மாத பொருட்கள் பெற டோக்கன் பெறுவதற்கு வந்தவர்கள், நாளை முதல் வழங்கப்படும் என பல ரேசன் கடைகளில்  அறிவிப்பை பார்த்து திரும்பி சென்றனர். மேலும் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்தும் ரேசனில் பணிபுரியும் ஆட்கள் பற்றாக்குறையால் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க முடியாத சூழ்நிலை தான் உள்ளது.வீட்டுக்கு வராமல் வீதிக்கு வந்த டோக்கன்; விநியோகத்தில் கும்மாங்குத்து குஸ்தி!

இந்நிலையில், மீனாட்சிபுரம் பகுதி ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அப்பகுதியில் ஒரு இடத்தில் வைத்து டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் அங்கு கூடினர். அப்போது டோக்கன் பெறுவதில் இருவருக்கு வாய்தகராரு ஏற்பட்டு பின் அடிதடி சண்டையில் முடிந்தது. உடனே ரேசன் கடை பணியாளர் டோக்கன் வழங்குவதை நிறுத்தி விட்டு நடையை கட்டினார். பின்னர், மக்கள் அவரை பின்தொடர்ந்து டோக்கன் வாங்க முண்டியடித்து சென்றனர்.

ரேசன் அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

‛உங்கள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துங்கள் முதல்வரே...‛ பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் அட்வைஸ்!

Tags: lockdown karaikudi Ration item token Fighting

தொடர்புடைய செய்திகள்

மதுரை : 400 பேருக்கு சாப்பாடு : பைக்கில் சுற்றிச்சுழன்று உதவும் மதுரை சிங்கப் பெண்கள் !

மதுரை : 400 பேருக்கு சாப்பாடு : பைக்கில் சுற்றிச்சுழன்று உதவும் மதுரை சிங்கப் பெண்கள் !

Sexual Harassment | ஆயுதமாக மாறும் ஓவியங்கள் : பாலியல் குற்றவாளிகளை கலையின் மூலம் தோலுரிக்கும் கல்லூரி மாணவி..!

Sexual Harassment | ஆயுதமாக மாறும் ஓவியங்கள் : பாலியல் குற்றவாளிகளை கலையின் மூலம் தோலுரிக்கும் கல்லூரி மாணவி..!

கொடைக்கானல் : பெட்ரோல் , டீசல் விலையேற்ற எதிரொலி : சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு..!

கொடைக்கானல் : பெட்ரோல் , டீசல் விலையேற்ற எதிரொலி :  சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு..!

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் : மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் :  மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு