மேலும் அறிய

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

’’நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்குப்போக மீதி உள்ளதை விலைக்கு கொடுத்து விடுவோம்"

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி  தாலுகாவில் உள்ளது   வாலிநோக்கம்  கடற்கரை கிராமம்.  அங்கு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடற்கரைக்கு  செல்லும் வழியில் அமைந்துள்ள தரவைக்காட்டில் உள்ள சதுப்பு நிலத்தில் பாலையாறு   செல்கிறது. இப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இறால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இது ஒருவகையான பொழுதுபோக்கு என கூறும் அப்பகுதி பெண்கள்,  இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது என்கின்றனர்.

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

இந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் பிடிக்கும்போது, பெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்கிறார்கள்.மேலும், ஆற்றின் தாழ்வான பகுதிகளில், கால்களை மடக்கி முட்டிபோட்டு நீருக்குள் தவழ்ந்தபடி, இரு கைகளால் இறால்களை தடவிப் பிடிக்கின்றனர். இவர்கள், பழைய முறைப்படி 'பரி' என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை மற்றும் துணிப் பைகளை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர். சுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து, கழுத்தளவு ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டு இரண்டு கைகளால் தண்ணீருக்குள் தடவியபடி தண்ணீருக்கு அடியில் இறால் மீனை தேடி பிடிக்கிறார்கள். அப்போது, அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடைப்பையில் போட்டுக்கொள்வர்கள். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கும்.

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

ஆனால், அதிருஷ்டம் இருந்தால் சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு. பொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், உடைந்த கண்ணாடி துகள்களும் (பீங்கான்)  வெட்டி பெரும் காயங்கள் ஏற்படுவதும் உண்டு என்கின்றனர் இந்த கிராம மீனவ பெண்கள். கழுத்து அளவு தண்ணீரில் நீந்தி கொண்டு இறால் மீன் பிடித்து கொண்டிருந்த ராமுத்தாய்  நம்மிடம் பேசியபோது, “நாங்க மேலக்கிடாரத்திலிருந்து  வருகிறோம். ஒரு நாளைக்கு அரை கிலோவும் பிடிப்போம், ஒரு கிலோவும் பிடிப்போம். ஏன் ரெண்டு கிலோ கூட பிடிப்போம். கையில தட்டுறதுக்கு தக்கன இருக்குறத கையில தடவி தான் பிடிப்போம். இது வெஞ்சனத்துக்கு ஆகும் கறிக்கு ஆகும். எங்க நேரத்துக்கு நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்குப்போக மீதி உள்ளதை விலைக்கு கொடுத்து விடுவோம். " என்றார்.

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

மேலும் தாங்கள் தினமும் வருவதில்லை அமாவாசை சமயத்தில் மட்டும் ஐந்து அல்லது ஆறு பேராக வந்து மீன் பிடிப்பதாக கூறும் இந்தப் பெண்கள், கடையில் வாங்கும் இறாலை காட்டிலும் கைகளில் பிடிக்கும் இறால்களுக்கு சுவை அதிகம் என்பதால் இதனை தங்களது விருப்பதிற்காக செய்வதாகவும், இறால் பிடிப்பதை தவிர்த்து, ஆடு மேய்பது, நூறு நாள் வேலைக்கு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவதாகவும், மழை பெய்யும் நேரத்தில் தேங்கும் நீரை வெட்டி விடாமல் இருந்தால் எப்போதும் இங்கு கூனி பிடிக்கலாம் எனவும் கூறுகின்றனர். இந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளாக இருக்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்.. உபியில் அதிர்ச்சி!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்!
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Embed widget