மேலும் அறிய
கழிவுகளைக் கலைப் பொருளாக்கிய ரயில்வே ஊழியர்கள்: மதுரை ரயில்வேயில் ஆச்சரியம் தரும் அதிசயம்!
கோபுர வடிவ கலைப் பொருள் தற்போது மதுரை கோட்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தின் முன் வாசல் அருகே நிறுவப்பட்டு பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

கோயில்வடிவ கோபுரம்
Source : whatsapp
தண்டவாளத்தை ரயில் பாதையுடன் இணைக்கும் கிளிப்புகள், ரயில் பாதை சந்திப்புகளை இணைக்க பயன்படும் வாஷர் வளையங்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி கோவில் கோபுரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
மதுரை கோட்டத்தின் சாதனைகள்
மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 69-வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்ட போது பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டத்திற்கு ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கழிவுப்பொருளை கலைப் பொருளாக்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.
கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றியுள்ளனர்
ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. தூய்மை பணியில் கழிவுப் பொருள் மேலாண்மையும், ரயில்வே வளாகங்களை அழகுபடுத்துதல் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறன. இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் கழிவு பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகு படுத்துகிறார்கள். அந்த வகையில் மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் இரும்பு தகடுகள், நீண்ட குழாய்கள், போல்ட், நட்டுகள், ஆங்கில சி எழுத்து வடிவ இரும்பு பொருட்கள், ரயில் பெட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடும் அச்சாணி, உடைந்த இரும்பு சுருள், ரயிலை நிறுத்த உதவும் வாயு அடைப்பான்கள், திறப்பான்கள், வளையங்கள், தண்டவாள துண்டுகள், தண்டவாளத்தை ரயில் பாதையுடன் இணைக்கும் கிளிப்புகள், ரயில் பாதை சந்திப்புகளை இணைக்க பயன்படும் வாஷர் வளையங்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி கோவில் கோபுரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
கழிவுப்பொருளை கோபுரமாக்கிய ரயில்வே ஊழியர்கள்
இந்த கோபுரத்தை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் குண்டேவார் பாதல் அவர்களது வழிகாட்டுதலோடு மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் ரமேஷ், அருண்குமார், கண்ணன், ஜெரால்ட் ஆண்ட்ரூஸ், பினாய் குமார், ஜஸ்டின் பீட்டர், லக்ஷ்மணன், சண்முக பாண்டி, இசக்கி ராஜா, தாமஸ், ரூபேஷ், விகாஸ் குமார் குப்தா, குருமூர்த்தி ஆகியோர் பத்து நாட்களில் உருவாக்கியுள்ளார்கள். இந்தக் கலை பொருள் ரயில்வே ஊழியர்களின் புதுமையான கண்டுபிடிப்பு, திறமை, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு, நிறுவனத்தில் உள்ள வளத்தை பலமாக்கும் பண்பு ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. இந்தக் கலைப் பொருள் தற்போது மதுரை கோட்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தின் முன் வாசல் அருகே நிறுவப்பட்டு பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















