மேலும் அறிய

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

தீபாவளி பண்டிகை ஆர்டர்கள் குவிந்து வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற சின்னாளபட்டி சுங்கிடி சேலை , கண்டாங்கி சேலை தயாரிப்பு பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

சுங்கிடி சேலை என்றாலே உடனே சட்டென்று நினைவுக்கு வருவது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சுங்கிடி சேலைதான். பண்பாட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள் என்றாலே பெண்மை போற்றும் ஆடை என்பது சேலைதான். சில்க் காட்டன், சம்பல்புரி காட்டன், பெங்கால் காட்டன், நீலாம்பரி போன்றவை கண்ணைக் கவரும் வகையில் வந்தாலும், கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் சுங்கிடி சேலைகளுக்கும் கண்டாங்கி சேலைகளுக்கும் எப்போதுமே தனி மவுசு உண்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சுங்கிடி பட்டு சேலையும், கண்டாங்கி சேலையும் வெளிநாடுகளிலும் புகழ் சேர்த்தது, பேன்சி சேலைகளுக்கு போட்டியாக, பொருளாதாரத்தை பாதிக்காத, உள்நாட்டு உற்பத்தி பொருளாக உருவெடுத்த பெருமையும் இதற்கு உண்டு.

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மேற்கொண்டு வந்த சுங்கிடி உற்பத்தி, 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஜீவாதார தொழிலாக இருந்தது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூலம், தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள், கொல்கத்தா ஜவுளி மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனையாகின. 

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

சின்னாளப்பட்டியில் சாயமேற்றுதல் நடந்தபோது தரம், வண்ணம், வேலைப்பாடு நுட்பம் போன்றவற்றால் மவுசு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவால் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூடியது. இதையடுத்து ஜவுளி நிறுவனங்கள், நெசவு தொழிலாளர்கள், சாயமேற்றுதல், கஞ்சிப்பசை நிறுவனத்தினர், அவற்றின் தொழிலாளர்கள் மட்டுமின்றி உலர்த்தல், துணி தேய்த்தல் தொழிலில் ஈடுபட்டோர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பாதி பேர் வேறு வேலை தேடி பிற இடங்களுக்குச் சென்று விட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சுங்கிடி, கண்டாங்கி சேலைகளுக்கு குவியும் ஆர்டர்கள்.. பரபரக்கும் தயாரிப்பு பணிகள்

மீதியுள்ளவர்கள் பணியை தொடர்ந்தாலும் வருமான வாய்ப்பு குறைந்திருந்தது. கொரோனா ஊரடங்கின் தளர்வுகளும் விழாக்காலங்களும் தொடங்கியுள்ளதால் கடந்த ஒன்றரை வருடங்களாக முடங்கியிருந்த சுங்கிடி பட்டு சேலை தயாரிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு பணியில்  இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர் தொழிலாளர்கள். மதுரை , கோயம்பத்தூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்டர்கள் தற்போது அதிகமாக வருவதால் சேலை தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகையே முடக்கி போட்ட கொரோனா எதிரொலியால் முடங்கியிருந்த இந்த சுங்கிடி சேலை உற்பத்தி தீபாவளியையொட்டி தற்போது வெகு விரைவாக உயிர்பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget