மேலும் அறிய

கேரளாவில் பேருந்து சங்கங்களின் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! முக்கிய கோரிக்கைகள் என்ன?

கேரளாவில்  தனியார் பேருந்துகளின் பொது வேலைநிறுத்தால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தனியார் பேருந்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கேரளா, பொதுவாகப் பாராட்டப்படும் ஒரு கல்வி, சுகாதாரம், சமூகநீதி முன்நிலை மாநிலம். இன்றைய வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பல்வேறு  சிரமங்களை சந்தித்துள்ளனர். இன்று ஜூலை 9ல் நடைபெறும் மற்றும்  நாளை 10ம் தேதிகளில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய வேலைநிறுத்தங்கள் என்றே கூறலாம். முதலில் இன்று மாநிலம் முழுக்க தனியார் பேருந்து சங்கங்கள் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடத்துகின்றன. கேரளாவில் தினசரி 12,000க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவை மாணவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்களுக்கெல்லாம் முதன்மை போக்குவரத்து வசதி. ஆனால் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு செலவுகள் போன்ற காரணங்களால் தற்போதைய கட்டணம் போதவில்லை என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

கேரளாவில் பேருந்து சங்கங்களின் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! முக்கிய கோரிக்கைகள் என்ன?

டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க வேண்டும். காப்பீடு பிரீமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்தல் வேண்டும். நஷ்ட ஈடு அல்லது அரசின் நேரடி உதவி வேண்டும். இதுதான் பிரச்சனையா என அதிகாரிகள் நெருக்கடி பேச்சுவார்த்தை நடத்தினாலும், சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை விட்டு மாறவில்லை. இதனால்  இன்று தனியார் பேருந்துகள் ஓடாமல் போனால், கேரள அரசு பேருந்துகள் மட்டுமே சேவை செய்யும் நிலை ஏற்படும். அவற்றும் போதாமல், அதிக சிரமம், கூட்டம், பரபரப்பு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் பேருந்து சங்கங்களின் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! முக்கிய கோரிக்கைகள் என்ன?

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி  மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவில் புதன் இன்று தனியார் பேருந்துகள் இயங்காது என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கத் தவறினால் ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.

கேரளாவில் பேருந்து சங்கங்களின் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! முக்கிய கோரிக்கைகள் என்ன?

முக்கிய கோரிக்கைகளாக காலாவதியான பெர்மிட்களை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும், குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கக்கூடிய பேருந்துகளை சாதாரண பேருந்துகளைப் போல் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சொல்லும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், மாணவர்களுக்கான கட்டணச் சலுகை விகிதங்களை திருத்த வேண்டும், காவல் துறையிடம் பேருந்து தொழிலாளர்கள் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்து போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் கேரளாவில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் நிமித்தமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை பொறுத்தவரை அரசு பேருந்துகளை விட பொதுமக்கள் தனியார் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து   நாளையும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் 24 மணி நேர தேசிய வேலைநிறுத்தம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
Embed widget