மேலும் அறிய

தேர்தல் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு, இணையவழி  சேவைகளை ஒருங்கிணைந்து ECINET என்ற செயலி பயன்பாட்டில் !

ECINET என்ற ஒரே செயலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தினால்  பொதுமக்கள்  தேர்தல் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு, இணையவழி  சேவைகளை ஒருங்கிணைந்து 

ECINET என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது- மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட் ஆட்சித்தலைவர் தகவல்.
 
சட்ட மன்ற தேர்தல்
 
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, 15.3.2026 அன்று முதல்,                          மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.  மேலும், தேர்தல் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய  வகையில்,  பல்வேறு வகையான இணையவழி செயலிகள் (Apps) உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய தேர்தல் ஆணையத்தால்  (Election Commission of India – ECI) உருவாக்கப்பட்டுள்ள “cVIGIL”  செயலி என்பது, தேர்தல் காலங்களில் நடைமுறையில் இருக்கும் மாதிரி நடத்தை விதிமுறை (Model Code of Conduct – MCC) மீறல்களை , பொதுமக்கள் நேரடியாக புகாரளிக்க உதவும் செயலி ஆகும். MCC விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அறியும்போது, cVIGIL செயலியின் மூலம்  மீறலின் வகையைத் தேர்வு செய்து, சம்பவம் தொடர்பான விவரங்களை — இடம், நேரம் மற்றும் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் பதிவு செய்து புகாரளிக்கலாம். 
மேலும்,  இச்செயலியின் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்ட புகார்களின் முன்னேற்ற நிலையை (status) பயனர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். cVIGIL பயன்பாடு அதன் எளிமையான வடிவமைப்பு, பயன்படுத்துவதற்கான எளிதான நடைமுறை, தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் பயனர் தகவல் ரகசியத்தன்மை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 
 
நேரில் படிவங்களை சமர்ப்பிக்கும் தேவை குறைக்கப்படுகிறது. 
 
அதேபோன்று, Voter Help Line செயலியானது, வாக்காளர் சேவைகளை பொதுமக்கள் எளிதில் அணுகும் முறையை மேம்படுத்தியதுடன், தேர்தல் தொடர்பான சேவைகளை விரைவாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. புதிய வாக்காளர்களின் பதிவு, வாக்காளர் பட்டியலில் உள்ள தனிப்பட்ட விவரங்களில் திருத்தம் செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான சேவைகள் பயன்பாட்டின் மூலம் வழங்கப்படுகிறது.   இதன் வாயிலாக தேர்தல் ஆணையமும் பொதுமக்களும் இடையே தொடர்பு ஏற்படுத்தும் செயல்முறை மேலும் எளிமையாகவும் செயல்திறனாகவும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் சில எளிய செயல்முறைகளின் வாயிலாக பயனர்கள், தேவையான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதுடன், தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்களையும் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் இணைய தளங்களிலிருந்து பெறலாம். இப்பயன்பாடானது பயனர் நட்பு (User-friendly) வடிவமைப்பு காரணமாக, உள்நுழைவு முதல் விண்ணப்பப் பதிவு வரை முழு செயல்முறையும் சில நிமிடங்களில் நிறைவேற்ற முடிகிறது. இதன் மூலம் பாரம்பரிய முறையில், நேரில் படிவங்களை சமர்ப்பிக்கும் தேவை குறைக்கப்படுகிறது. 
 
மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடிப்படை விவரங்களை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில், வடிவமைக்கப்பட்ட  செயலியாக Saksham  செயலி விளங்குகிறது.  தேர்தல் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காக, Saksham  செயலியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள், வாக்குநாளில் (Poll Day) வாக்குச்சாவடிக்கு வருவதற்காக வீல் சேர் (Wheelchair) வசதியை கோரியும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, மாற்றுத்திறனாளிகள் தேர்தல் தொடர்பான சேவைகளை எளிதாகப் பெறுவதற்கும், அவர்களின் வாக்குரிமையை சுலபமாகப் பயன்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றுகிறது. மேற்குறிப்பிட்டுள்ள செயலிகள் அனைத்தும், தற்போது ECINET என்ற ஒரே செயலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சித்தலைவர்  திருமதி கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget