மேலும் அறிய

மதுரை ரயில் நிலையத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

அனைத்து பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாத இறுதியில் இரட்டை ரயில் பாதை போக்குவரத்துக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை பணிகளில் மதுரை - திருமங்கலம் மற்றும் மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவுகள் தவிர மற்ற பகுதிகளில் இரட்டை இரயில் பாதைப்பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை - திருமங்கலம் பிரிவில் இரட்டை ரயில் பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக மதுரையில் ரயில் பாதை இணைப்பு பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது.
 
மதுரை ரயில் நிலையத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
இந்த இணைப்பு பணிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. மதுரையில் 9 மற்றும் 10வது தண்டவாளப்பகுதி மற்றும் போடி நாயக்கனூர் ரயில் பாதை பகுதியில் உள்ள ரயில் பெட்டிகள் நிறுத்தும் தண்டவாளங்களில் ஆகியவற்றில் மின்மயமாக்கல் பணிகள், ரயில் பெட்டி பராமரிப்பு மைய தண்டவாளங்களில் மின் மயமாக்கல் பணிகள், எட்டு மற்றும் 9வது தண்டவாளங்களில் ரயில் புறப்படுவதற்கான சிக்னல் அமைப்பு, 10வது ரயில் பாதை தற்போதைய 445 மீட்டரில் இருந்து 610 மீட்டராக நீளம் அதிகரிப்பு,  நடைமேடைகள் எண் 1, 2-3, 4-5 முறையே 617, 625, 617 மீட்டராக நீளம் அதிகரிப்பு, ரயில் இன்ஜின்கள் நிறுத்துவதற்கு தனி ரயில் பாதை, ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையில் ரயில் பெட்டிகள் ஷண்டிங் செய்யும் வசதி, கூடல் நகர் செல்லும் ரயில் பாதையில் வழக்கமான ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் ரயில் பெட்டிகள் ஷண்டிங் செய்ய  60 மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதை நீட்டிப்பு.

மதுரை ரயில் நிலையத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
தற்போதைய மின் தடங்களை வசதிக்கேற்ப மாற்றி அமைத்தல், நான்கு புறமும் ரயில்களையே ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்குள் கொண்டுவர பத்துக்கும் மேற்பட்ட பாயிண்ட்களை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற இருக்கின்றன.  இதன் மூலம் கூடல் நகர், திருப்பரங்குன்றம், சிலைமான், உசிலம்பட்டி போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை மதுரைக்கு வெளியே நிறுத்தாமல் ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்கு கொண்டு வரும் வசதி கிடைக்கும். மதுரை ரயில் நிலையத்தில் நெருக்கடிகளை தவிர்த்து ரயில்களை கையாள எளிதாக இருக்கும். மதுரையில் இருக்கும் பத்து ரயில் பாதைகளிலும் ரயில்களை நிறுத்தாமல் செலுத்தும் வசதி உருவாகும். திருப்பரங்குன்றம் திருமங்கலம் ரயில் நிலையங்களில் ரயில்கள் காத்திருக்க வைப்பது தவிர்க்கப்படும். பயணிகள் ரயில்களை கையாள ஏழாவது நடைமேடை ஒன்று உருவாக்கப்படும். ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயங்க வழிவகை செய்யும். கூடல் நகர், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில்சரக்கு ரயில்கள் காத்திருப்பது தவிர்க்கப்படும். ரயில் இன்ஜின்கள் நிறுத்த தனி ரயில் பாதை கிடைக்கும். அனைத்து பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாத இறுதியில் இரட்டை ரயில் பாதை போக்குவரத்துக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget