Pongal 2024: கணவன், மனைவியை அதிக நேரம் தூக்கி வைத்திருக்க வேண்டும்; திண்டுக்கல்லில் வினோத போட்டி - எந்த ஜோடி வெற்றி பெற்றது?
போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாக கடைசிவரை தனது மனைவியை கைவிடாமல் வைத்திருந்த கார்த்தி சௌடீஸ்வரி தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கணவன், மனைவியை அதிக நேரம் தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி நடைபெற்றது.
Jallikattu 2024 LIVE: களத்தில் தண்ணி காட்டும் காளைகள்! அடங்காமல் அடக்கும் முயற்சியில் காளையர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சட்டி உடைக்கும் போட்டி, கழுகு மரம் ஏறும் போட்டி, லக்கி கார்னர், கபடி போட்டி, ஓட்டப்பந்தயம் உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. லக்கி கார்னர் என்ற போட்டியில் ஜீவிகா என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் நடைபெற்ற லக்கி கார்னர் போட்டியில் சிறுவர் விமலேஷ் வெற்றி பெற்றார்.
இதில் கணவன், மனைவியை அதிக நேரமாக தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். இளம் கணவன், மனைவிகள் மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். நேரமாக ஆக கணவன்மார்களுக்கு வேர்த்து கொட்டியதை மனைவிகள் துடைத்துவிட்டு அவர்களுக்குஉறுதுணையாக இருந்தனர். போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாக கடைசிவரை தனது மனைவியை கைவிடாமல் வைத்திருந்த கார்த்தி சௌடீஸ்வரி தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
Praggnanandhaa: "ஆளப்போறான் தமிழன்" இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா!
வெற்றி பெற்ற கணவனும் மனைவியும் அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சினிமாவில் வருவது போல் இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வெற்றி பெற்ற தம்பதியினருக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.