(Source: ECI/ABP News/ABP Majha)
Maharshi Charak Shapath Oath : ’சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை’ : மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் பேட்டி
மருத்துவ கல்லூரி நிகழ்ச்சிக்கான நேரக்குறைவால் தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரக அறிவுறுத்தலின் படி சரக்ஷபத் உறுதிமொழியை மாணவர் பேரவையாகவே எடுத்துவிட்டோம், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை
நேற்று முன் தினம் மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவகல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..,” நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை, ஆங்கிலத்திலயே உறுதிமொழி ஏற்றோம், உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி தான் ஏற்கப்பட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரக அறிவிப்பின்படிதான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் எடுத்து உறுதிமொழி எடுத்தோம்,