மேலும் அறிய

Palani Murugan Maanadu : "நாளை நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” முழு விவரம் இதோ!

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை துவங்க உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு.

பழனியில் வருகின்ற 24,25ம் தேதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அருள்மிகு பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில்  நாளை தொடங்கி நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மா நாட்டிற்கு வரும் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Palani Murugan Maanadu :

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு  நாளை சனிக்கிழமை 24 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  இதற்கான கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3ஆம் தேதி துவங்கி  மநாட்டிற்கான பணிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வகங்கள், 1300 ஆய்வு கட்டுரைகள், இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 4 நீதிஅரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது.

Palani Murugan Maanadu :

3D வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையில் 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. முருகன் பெருமை விளக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம், கந்த சஷ்டி கவசம் என காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு, தலைவர்கள் மாநாட்டுக்கு வரும் போது 8000 பக்தர்கள் அமைந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரப் பணிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும் தூய்மை பணியாளர்கள், பிரத்யேகமாக கூடிய மருத்துவ வாகனங்கள், தேவையான அளவு பேருந்துகளை இயக்கவும், வருகின்ற நபர்களுக்கு குடிநீர் இயற்கை உபாதையில் கட்டமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் அரங்கத்திற்கு சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வழியில் நான்கு சக்கர நாற்காலிகள், இரண்டு நாள் மாநாட்டில் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் மற்றும் உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Palani Murugan Maanadu :

மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என  450-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடையிலேயே இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை்தரும் அனைவருக்கும் பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழாவில் பங்குபெற முடியாதவர்கள் நேரலையிலும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Sukanya Samriddhi Yojana: பெற்றோர்களே கவனம்..! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்தது மாற்றம் - தவறினால் கணக்குகள் மூடப்படும்
Sukanya Samriddhi Yojana: பெற்றோர்களே கவனம்..! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்தது மாற்றம் - தவறினால் கணக்குகள் மூடப்படும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata Banerjee | பணிந்தார் மம்தா! மருத்துவர்கள் SHOCK TREATMENT! மீட்டிங்கில் பேசியது என்ன?Vijay Vikravandi Maanadu | விக்கிரவாண்டி ஏன்? சொதப்பிய விஜய்? கடுப்பில் நிர்வாகிகள்SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Sukanya Samriddhi Yojana: பெற்றோர்களே கவனம்..! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்தது மாற்றம் - தவறினால் கணக்குகள் மூடப்படும்
Sukanya Samriddhi Yojana: பெற்றோர்களே கவனம்..! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்தது மாற்றம் - தவறினால் கணக்குகள் மூடப்படும்
Atishi Marlena Singh: ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?
ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?
காஞ்சி சங்கரமடம் எதிரில் பெரியார் சிலை... சிலை வைக்க நடந்த போராட்டங்கள் பற்றி தெரியுமா ? 
காஞ்சி சங்கரமடம் எதிரில் பெரியார் சிலை... சிலை வைக்க நடந்த போராட்டங்கள் பற்றி தெரியுமா ? 
Watch Video : நீங்க பயன்படுத்தும் தேயிலையில் கலப்படம் இருக்கா? சுத்தமானதா? இதோ வீடியோ விளக்கம்..
நீங்க பயன்படுத்தும் தேயிலையில் கலப்படம் இருக்கா? சுத்தமானதா? இதோ வீடியோ விளக்கம்..
India vs Bangladesh:டெஸ்ட் கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா! திருப்பி அடிக்குமா வங்கதேசம்? இதுவரை எப்படி
India vs Bangladesh:டெஸ்ட் கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா! திருப்பி அடிக்குமா வங்கதேசம்? இதுவரை எப்படி
Embed widget