நெய் விவகாரம்; வினோஜ் பி செல்வம் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்
பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பா.ஜ.க தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது தவறான தகவலை பரப்பியதாக புகார்.
ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்யப்படுகிறது என்ற தவறான செய்தியை பரப்பிய பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது அடிவாரம் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும் லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு செய்திருந்தார்.
Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் - இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க
அதில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். புட்ஸ் நிறுவனம்தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்ற செய்தியும், அந்த நிறுவனத்தின் தலைவராகவுள்ள ராஜசேகரன் என்பவர் பழனி கோவில் நிர்வாக குழு தலைவராக செயல்படுகிறார் என்ற செய்தியும் சந்தேகங்களை எழுப்பப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு இவரை பணிநீக்கம் செய்வதுடன் ஆவின் நிறுவனத்திடம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் தவறான செய்தியை பதிவு செய்திருந்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசு நேற்று இதுகுறித்து விளக்கம் ஒன்று அளித்திருக்கிறது. அதில், பழனி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்தே பெறப்படுகிறது என்றும் அறநிலையத்துறை கூறியிருந்தது. மேலும் பழனி கோவில் அறங்காவலர் குழு கடந்த மாதம் பதவி காலம் முடிந்து விட்டது. ராஜசேகரன் என்பவர் குழுவின் தலைவர் இல்லை என்பதும் அவர் குழுவில் ஒரு உறுப்பினர் என்பதன் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பா.ஜ.க தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது தவறான தகவலை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.