Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
- மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை – உச்சகட்ட பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர்
- ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல்; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
- டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு – ஆம் ஆத்மியினர் உற்சாகம்
- மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவை ரத்து செய்தது மும்பை உயர்நீதிமன்றம்
- சென்னை, விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி
- பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை தொடங்கும் நாளில் ரயில் மறியல் போராட்டம் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி 4 மாவட்ட மீனவர்கள் அறிவிப்பு
- கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை; சி.பி.ஐ. அலுவலகம் நோக்கி இளநிலை மருத்துவர்கள் பிரம்மாண்ட பேரணி
- கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.
- குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அமெரிக்காவிற்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – நாளை மறுநாள் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்
- கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மை பணியாளர் படுகாயம்
- ரஜினிகாந்தின் வேட்டையன் இசை வெளியீடு; போலி டிக்கெட்டுடன் பலர் பங்கேற்றதாக புகார்
- பா.ஜ.க.வால் பாவப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க. மீண்டுவர வேண்டும் – அமைச்சர் உதயநிதி
- கார் ரேஸ் நடத்தும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா? முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி
- இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு – பெரும் எதிர்பார்ப்பு
- காஷ்மீரில் நடைபெற்ற விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
- காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 37 பேரும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
Breaking News LIVE: என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது: ராகுல்காந்தி
”என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது. இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். உண்மையை சகிக்க முடியாததால் பாஜகவினர் என்னை மௌனமாக்க துடிக்கின்றனர். ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகலை கேட்க விரும்புகிறேன். நான் கூறியதில் ஏதேனும் தவறு உள்ளதா?” என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
Breaking News LIVE: டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவியேற்பு
டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமானம் செய்து வைத்தார். டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். கோபால் ராய், பரத்வாஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சுஸ்மாசுவராஜ், ஹீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3 பெண் முதலமைச்சர் அதிஷி ஆவார்.
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
தமிழக வெற்றிக்கழகத்தின் எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் முன்பு நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் இருந்த விஜய் புகைப்படம் தற்போது பொட்டு இல்லாமல் கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு!
இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 2 மணி நிலவரப்படி, நுவரெலியா 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மொனராகலையில் 65 சதவிகித வாக்குகளும் மாத்தறையில் 62 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ரத்னபுராவில் 60 சதவிகித வாக்குகளும் கொழும்புவில் 60 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.