Palani Kumbabishekam:செல்போனை செக் பண்ணுங்க..! பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு தேர்தெடுக்கப்பட்ட 2000 பேர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள 2000 பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. மலைமீது நடைபெறும் குடமுழுக்கு விழாவில் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து திருக்கோயில் இணையதளத்தில் 51,295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களில் குலுக்கல் முறையில் இரண்டாயிரம் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி இன்று நடைபெற்றது. அதன்படி இன்று பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சுழற்சி முறையில் 2000 பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Bigg Boss 6 Tamil: பிரம்மாண்டமான பிக்பாஸ் இறுதிப்போட்டி...! Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது
இதில் தேர்வான பக்தர்களின் கைப்பேசி மற்றும் இமெயில் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதில் தேர்வான பக்தர்கள் அனைவரும் வருகிற 23ம்தேதி முதல் 25ம்தேதி வரையில், பழனி கோயில் தேவஸ்தான அலுவலகத்தில் நேரில் சென்று தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் அசல் அடையாள அட்டையை காண்பித்து, ஹாலோகிராம் பொருத்திய அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்